கோத்தாவை வேட்பாளராக அறிவிக்க மகிந்த முடிவு– அமெரிக்க குடியுரிமையை துறக்க விண்ணப்பம்

0 5

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளார்.

கடந்த மார்ச் 6ஆம் நாள், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமை துறப்புக்கான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை நிறுத்துவதற்கு, மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார் என்றும், இது தொடர்பான அறிவிப்பை அவர் சிங்கள- தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு, ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது, கோத்தாபய ராஜபக்சவை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அமெரிக்க குடியுரிமையை துறக்கும் விண்ணப்பத்தை சமர்ப்பித்தமை குறித்து கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று கோத்தாபய ராஜபக்சவைத் தொடர்பு கொண்டு கருத்து அறிய முயன்ற போது, அவர் கருத்து வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.