`ஏ.சி.சண்முகம் எங்கே…எனக்காகக் காத்திருக்க மாட்டாரா?’- அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கோபம்

0 3

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏசிசண்முகத்தை முன்னாள் அமைச்சர் விஎஸ்விஜய் பொது இடத்தில் அநாகரிகமாக ஒருமையில் திட்டியதால் நிர்வாகிகள் கடுப்பாகினர்வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசிசண்முகம் போட்டியிடுவதை அதிமுக முன்னாள் அமைச்சர் விஎஸ்விஜய் விரும்பவில்லை தனக்கு ‘சீட்’ கிடைக்காத அதிருப்தியில் ஏசிசண்முகத்துக்கு எதிராகக் குழிப்பறிக்கிறார் என்று விஜய் மீது அதிமுக நிர்வாகிகளே கொந்தளிக்கிறார்கள் இதையறிந்தும் முன்னாள் அமைச்சர் விஜய்யை சமரசம் செய்து தேர்தல் பணிகளில் தலைமை தாங்குமாறு கூறி அருகில் வைத்திருக்கிறார் ஏசிசண்முகம் ‘இதுதான் சந்தர்ப்பம்’ என்று வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக ஏசிசண்முகத்தைக் கூடவே இருந்து கடுப்பேற்றி வருகிறார் விஜய் “எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தாமதமாக வருகிறார் ஏசிசண்முகத்துடன் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்’’ என்று குமுறுகிறார்கள் அதிமுக நிர்வாகிகள்இந்த நிலையில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மக்கானில் உள்ள அவரது சிலைக்கு ஏசிசண்முகம் நேற்று காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்ச்சிக்கான நேரம் முன்கூட்டியே முன்னாள் அமைச்சர் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டது ஆனால் 1030 மணியாகியும் விஜய் வரவில்லை நீண்ட நேரமாகக் காத்திருந்த ஏசிசண்முகம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டுப் புறப்பட்டுச்சென்றார் அதன்பிறகு தாமதமாக வந்த முன்னாள் அமைச்சர் விஜய் ‘‘ஏசிசண்முகம் எங்கே போனார் எனக்காகக் காத்திருக்க மாட்டாரா வெற்றிபெறுவதற்கு முன்பே இப்படியென்றால் எம்பி ஆனால் என்னை மதிப்பாரா’’ என்று பொது இடத்தில் நின்றுகொண்டு அநாகரிகமாக ஒருமையில் பேசி வசைபாடியதாகக் கூறப்படுகிறதுஅப்போது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கவந்த திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் ‘‘என்னப்பா உங்க வேட்பாளரை மிரட்டுறியா’’ என்று கேட்டுச் சிரித்துக்கொண்டே சென்றார் பொது இடத்தில் ஏசிசண்முகத்தைத் திட்டியதால் முன்னாள் அமைச்சர் விஜய் மீது அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கடுப்பில் இருக்கிறார்கள் ‘‘வெற்றிக்கு உறுதுணையாக இல்லை தோல்விக்குத் தோல் கொடுக்கிறார் விஜய்யை தேர்தல் பணிகளிலிருந்து ஒதுக்குங்கள்’’ என்று ஏசிசண்முகத்திடம் அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியிருக்கிறார்கள்

Leave A Reply

Your email address will not be published.