`ஸ்டாலினை நம்பி யாரும் ஓட்டு போட்டுடாதீங்க!’  – பிரசார களத்துக்குத் திரும்பிய விஜயகாந்த்

0 14

நீண்ட காலத்துக்குப் பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்களைச் சந்தித்துள்ளது அவரது கட்சியினரை உற்சாகமடையச் செய்துள்ளது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விஜயகாந்த் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய சென்னை வடசென்னை பகுதிகளில் இன்று பிரசாரம் மேற்கொண்டார் கடந்த டிசம்பர் 2017 ஆர்கேநகர் இடைத்தேர்தலின்போது சிலமணி நேர விசிட்டாக ரவுண்டு அடித்தது போல விஜயகாந்த்தின் இன்றைய சுற்றுப் பயணமும் வடிவமைக்கப்பட்டிருந்ததுவெள்ளைச் சட்டை நீல நிற ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் சகிதம் மாலை 530 மணிக்கு உதவியாளர் குமாரின் கரத்தை பிடித்தபடி வீட்டை விட்டு வெளியே வந்தார் விஜயகாந்த் வாசல் வரை வந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா வழியனுப்ப சாலிகிராமத்தில் இருந்து வில்லிவாக்கத்துக்குப் புறப்பட்டது விஜயகாந்த்தின் வாகனம் வழியெங்கும் நின்றிருந்த தொண்டர்களுக்கும் மக்களுக்கும் உற்சாகமாகக் கையசைத்து கட்டைவிரலை உயர்த்திக்காட்டிய விஜயகாந்த் அவ்வப்போது முரசு சின்னத்தையும் எடுத்துக் காட்டி உற்சாகமானார்வில்லிவாக்கத்தில் மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பாலுக்காக வாக்கு சேகரித்த விஜயகாந்த் அய்யா ராமதாஸ் சொன்னபடி மாம்பழம் சின்னத்துக்கு ஓட்டு போட வேண்டும் நீங்க எல்லாம் நம்ம கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரிக்கணும்’’ எனப் பேச கூட்டத்தில் விசில் பறந்தது முன்பெல்லாம் கண்ணில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்ததால் கூலிங் கிளாஸ் அணிந்து அதை மறைப்பது விஜயகாந்த் வழக்கம் அவ்வப்போது ‘கர்ச்சிஃப்’பால் துடைத்தபடி இருப்பார் இம்முறை பயணத்தின் பெரும்பாலான நேரங்களில் கூலிங் கிளாஸ் இல்லாத விஜயகாந்த்தைப் பார்க்க முடிந்ததுகொளத்தூர் மூகாம்பிகை கோயில் அருகே வடசென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜுக்காக ஆதரவு திரட்டிய விஜயகாந்த் ஸ்டாலினை நம்பி யாரும் ஓட்டு போட்டுடாதீங்க இரண்டு முறை அவரை கொளத்தூர் தொகுதில ஜெயிக்க வைச்சீங்க உங்க நிலைமை எதுவும் மாறலையே வேன் மேல நிற்கிறவர்தான் நம்ம வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் நல்ல உள்ளம் படைத்தவர் அவருக்கு நீங்க ஆதரவு தரணும்’’ என்றார் நீண்ட நாள்களுக்குப் பிறகு கேப்டன் விஜயகாந்தின் குரலை நேரில் கேட்டதால் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக மிகுதியில் கூச்சலிட்டார்கள்அமெரிக்க சிகிச்சைக்குப் பிறகு விஜயகாந்த்தின் உடல்நிலையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லையென்றாலும் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது நன்றாகவே தெரிந்தது ஆர்கேநகர் இடைத்தேர்தலின்போது வேனில் சுற்றுப்பயணம் செய்த விஜயகாந்த்தால் பேசக்கூட முடியவில்லை ஆனால் இன்றைய சுற்றுப்பயணத்தில் நான்கு இடங்களில் விஜயகாந்த் பேசினார் பெரம்பூர் மூலக்கடை அருகே பிரசார வேன் வந்தபோது குழுமியிருந்த தொண்டர்கள் வாகனத்தை வழிமறித்து விஜயகாந்த்தை சில வார்த்தைகள் பேசுமாறு கேட்டனர் பெரம்பூர் தொகுதில நம்ம கூட்டணிக் கட்சி வேட்பாளர்தான் நிற்கிறார் அவருக்கும் வடசென்னை வேட்பாளர் நம்ம அழகாபுரம் மோகன்ராஜுக்கும் நீங்க ஆதரவு தரணும் மக்களே மறந்துறாதீங்க” எனப் பேச கரகோஷம் அதிர்ந்தது பல்வேறு இடங்களில் விஜயகாந்த்துக்கு திருஷ்டி கழிக்கப்பட்டது சில தொண்டர்கள் பிரசார வேன் முன்பு சூரைத் தேங்காய் உடைத்தனர் அப்போதெல்லாம் வேனின் உட்புற லைட் அணைக்கப்படும் விநோதம் அரங்கேறியதுவடசென்னையில் போட்டியிடும் அழகாபுரம் மோகன்ராஜ் அதிமுக-வினர் யாரும் தனக்கு ஒத்துழைப்பதில்லை பிரசாரத்துக்கும் வருவதில்லை என்று வருத்தத்தில் இருந்தார் கடந்த ஒருவாரத்துக்கு மேலாக அவரை தொகுதிக்குள் யாரும் பார்க்க முடியவில்லை சொந்த ஊரான சேலத்துக்கே அவர் சென்றுவிட்டதாகவும் தகவல் பரவியது இந்நிலையில் இன்று மூன்று மணிநேரத்துக்கும் மேலாக வடசென்னை தொகுதியில் அழகாபுரம் மோகன்ராஜுக்காக விஜயகாந்த்தே பிரசாரத்தில் ஈடுபட்டது தேமுதிக தொண்டர்களை ஆறுதல்படுத்தியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.