`ரத்தத்தில் காதல் கடிதம்; காதலின் மறுபெயர் சிறை!’- இன்ஜினீயரிங் மாணவர்கள் சிக்கியது எப்படி?

0 4

பள்ளியில் படிக்கும் போதே அவர்களுக்குள் காதல் மலர்ந்தது அந்தக் காதல் ஜோடி சிறகு முளைத்து பறக்க முயன்றபோதுதான் காதலனும் அவனின் நண்பனும் சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் கைதான இவரும் இன்ஜினீயரிங் மாணவர்கள் சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி பெற்றோருடன் தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரியைச் சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார் அதன்பேரில் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸாரை விசாரணை நடத்த இணை கமிஷனர் உத்தரவிட்டார் மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் கொடுக்க போலீஸார் விசாரணை நடத்தி மாணவிக்கு தொல்லை கொடுத்ததாக இன்ஜினீயரிங் மாணவர்கள் ஸ்ரீநாத்(20) யோகேஷ் (19) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் மாணவர்கள் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள் “வேளச்சேரியில் உள்ள பள்ளியில்தான் ஸ்ரீநாத்தும் அந்த மாணவியும் படித்தனர் வீட்டுக்கும் அந்த மாணவியை அழைத்து வந்துள்ளார் அப்போது தன்னுடைய ஃப்ரெண்டு என்றுதான் எங்களிடம் ஸ்ரீநாத் அறிமுகப்படுத்தினார் அதனால் நாங்கள் அவர்கள் பழகுவதை தவறாகக் கருதவில்லை ஆனால் இருவரும் உயிருக்கு உயிராகக் காதலித்துள்ளனர் தற்போது மாணவி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரியிலும் ஸ்ரீநாத் சென்னையின் அருகே உள்ள பிரபலமான இன்ஜினீயரிங் கல்லூரியிலும் படித்தனர் ஸ்ரீநாத்தின் நண்பன் யோகேஷும் இன்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கிறார்  இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன் அந்த மாணவியுடன் சேர்ந்து ஸ்ரீநாத் செல்ஃபி எடுத்துள்ளார் அந்தப் புகைப்படம்தான் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது அதைப்பார்த்த மாணவியின் உறவினர் வீட்டில் தகவல் தெரிவித்துள்ளார் அதன்பிறகு காதல் விவகாரம் எங்களுக்குத் தெரியவந்தது தற்போது செமஸ்டர் தேர்வு நடந்துவருகிறது ஸ்ரீநாத்திடம் மாணவியின் தரப்பிலிருந்து சிலர் பேசியுள்ளனர் ஆனால் அவர் அதைப் பெரிதுபடுத்தவில்லை காதல் பஞ்சாயத்தை எங்களிடமும் சொல்லவில்லை மாணவியும் நாங்களும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இதுதான் மாணவியின் தரப்பினருக்கு ஸ்ரீநாத்தைப் பிடிக்கவில்லை மாணவியின் தரப்பினர் மாமல்லபுரத்தில் உள்ள விடுதிக்கு மாணவியை அழைத்துச் சென்று போட்டோ எடுத்ததாகச் சொல்கிறார்கள் ஆனால் மாணவி படிக்கும் கல்லூரிக்குதான் அவரை அழைத்துச் சென்றார் ஸ்ரீநாத் மாணவி மைனர் என்று கூறி புகைப்படத்தைக் காட்டி அவரை மிரட்டியதாகக்கூறி அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் புகாரைப் பெற்ற காவல்துறை அதிகாரிகள் ஸ்ரீநாத் யோகேஷ் தரப்பினரிடம் விசாரித்துள்ளனர் அவர்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் மிரட்டியுள்ளனர் ஸ்ரீநாத்தும் யோகேஷிடம் காவல் நிலையத்தில் இருக்கும் தகவலையறிந்து நாங்கள் அங்கு சென்றோம் காவல்துறை அதிகாரிகளிடம் பேசிப்பார்த்தோம் அப்போது உதவி கமிஷனர் ஒருவர் இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்தால் மாணவிக்கும் மாணவர்களுக்கும் அவமானம் என்று மாணவியின் தரப்பினரிடம் முடிந்தளவுக்குப் பேசிப்பார்த்தார் அப்போது மாணவியின் தரப்பினர் மனம்மாறாமல் பிடிவாதமாக இருந்தனர் இதனால்தான் வேறுவழியின்றி போக்ஸோ சட்டத்தின் கீழ் ஸ்ரீநாத்தையும் யோகேஸையும் போலீஸார் கைதுசெய்துவிட்டனர்  உண்மையில் மாணவியும் ஸ்ரீநாத்தும் காதலர்கள் அதை நிரூபிக்க ஸ்ரீநாத்தின் அறையிலிருந்து மாணவி ரத்தத்தில் எழுதிய கடிதம் உட்பட காதல் கடிதங்களை கைப்பற்றி காவல்துறை அதிகாரிகளிடம் காண்பித்தோம் மேலும் ஸ்ரீநாத்தின் செல்போனுக்கு மாணவி அனுப்பிய மெசேஜ்களையும் காட்டினோம் அதைப்பார்த்த காவல்துறை அதிகாரிகள் மீண்டும் மாணவியின் பெற்றோரிடம் பேசிப்பார்த்தனர் அப்போதுகூட மாணவியின் தரப்பினர் மனமாறவில்லை எங்களிடம் மாணவி மைனர் அதனால் கைது செய்வதைத் தவிர வேறுவழியில்லை என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர் இன்ஜினீயரிங் படிக்கும் அவர்கள் சிறைக்கம்பிகளை எண்ணிக் கொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது மாணவி மட்டும் காவல் நிலையத்துக்கு வந்திருந்தால் நிலைமையே மாறியிருக்கும் ஆனால் மைனர் என்பதால் அவர் கடைசிவரை காவல் நிலையத்துக்கு வரவில்லை காதலால் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது என்றனர் வேதனையுடன்மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டபோது அவர்கள் பதிலளிக்கவில்லை மாணவியின் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள் “காதல் என்ற பெயரில் மாணவியை விடுதிக்கு ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளனர் அப்போது ரகசியமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர் இது சம்பந்தப்பட்ட மாணவிக்குத் தெரியாது மேலும் மனதளவில் மாணவி பாதிக்கப்பட்டுள்ளார் பள்ளியில் படிக்கும்போது மாணவி காதலித்ததாகச் சொல்கிறார்கள் உண்மையாக காதலித்தால் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்றனர் ஆவேசத்துடன்  காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது “சம்பந்தப்பட்ட மாணவியின் எதிர்காலம் கருதி அவரின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன பொள்ளாச்சி சம்பவத்துக்குப் பிறகு இதுபோன்ற புகார்களை கவனமாக விசாரித்துவருகிறோம் மாணவியின் தரப்பிலிருந்து எங்களிடம் கொடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடிப்படையில்தான் ஸ்ரீநாத் யோகேஷ் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் மாணவர்களிடமும் தனித்தனியாக விசாரித்துவிட்டோம் போட்டோ பதிவு செய்யப்பட்ட ஐடியையும் கண்டுபிடித்தபிறகுதான் நடவடிக்கை எடுத்தோம்  மேலும் மாணவி இன்ஜினீயரிங் முதலாமாண்டு படித்தாலும் அவருக்கு 18 வயது பூர்த்தியாக சில மாதங்கள் உள்ளன அவர் மைனர் என்பதால்தான் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம் ஸ்ரீநாத்தும் மாணவியும் நெருக்கமாக செல்ஃபி எடுத்துள்ளனர் அந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பதிவு செய்யப்பட்டதுதான் பிரச்னை அந்தப் புகைப்படத்தை காட்டி மாணவி மிரட்டப்பட்டதாக அவரின் பெற்றோர் கூறியுள்ளனர் இதனால்தான் ஸ்ரீநாத்துடன் சேர்த்து யோகேஷையும் கைது செய்துள்ளோம் என்றனர்சிறையில் மாணவர் ஶ்ரீநாத்தை சந்தித்த வழக்கறிஞர்களிடம் “அவள் (காதலி) நிச்சயம் என் மீது புகார் கொடுத்திருக்க மாட்டாள் இந்தப் புகாருக்குப் பின்னணியில் சதி நடந்திருக்கிறது அவளிடம் விசாரித்தால் என்னை எந்தளவுக்குக் காதலித்தாள் என்பதை நிச்சயம் சொல்வாள் போலீஸார் முதலில் அவளிடம் விசாரித்திருக்க வேண்டும் எங்கள் காதல் புனிதமானது நாங்கள் எடுத்த செல்ஃபி போட்டோவில் எந்தவித ஆபாசமும் இல்லை எங்களின் காதலை புரிந்துகொள்ளுங்கள்3939 என்று கண்ணீருடன் கூறியுள்ளார் ஸ்ரீநாத் கைது செய்யப்பட்ட பிறகு மாணவி தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தகவல் வெளியானது ஆனால் அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை அதுபோல இந்த வழக்கில் காவல்துறையில் உள்ள சில உயரதிகாரிகள் கவனிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது அதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் கேட்டதற்கு `எங்களின் கடமையைச் செய்தோம் பாதிக்கப்பட்டவர்கள் தேவையில்லாத வதந்திகளைப் பரப்புகின்றனர் பணம் வாங்கியதை உறுதிப்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்39 என்றனர் இன்ஜினீயரிங் படிக்கும் இரண்டு மாணவர்கள் மைனர் பெண் காதல் விவகாரத்தில் சிக்கி சிறைக்கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்  காதல் புனிதமானதுதான் அது அதற்குரிய வரம்பிற்குள் இருக்க வேண்டும்  

Leave A Reply

Your email address will not be published.