`இன்னும் ஒரு மாதம் இருக்கு!’- வாக்குப் பெட்டி இருக்கும் இடத்தை கண்காணித்து வரும் எதிர்க்கட்சிகள்

0 6

தமிழகத்தில் கடந்த 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அனைத்து வாக்குப்பெட்டிகளும் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது அங்கு அனைத்துக் கட்சியினர் முன் பெட்டிகள் வைக்கப்பட்ட ஸ்டார்ங் ரூம் எனப்படும் அறைக்குள் வைத்து சீல் வைக்கப்பட்டதுஇந்த நிலையில் மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நள்ளிரவில் நுழைந்த பெண் தாசில்தார் அங்கிருந்து சில ஆவணங்களை எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பெண் தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின இந்தச் சம்பவம் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது வாக்கு எண்ணிக்கை மே  23-ம் தேதி நடக்கும் நிலையில் சரியாக இன்னும் ஒரு மாதகாலம் உள்ளதுஇந்த இடைப்பட்ட சமயத்தில் மதுரைச் சம்பவம் போல் வேறு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் நடக்க வாய்ப்புள்ளதாகக் கருதி தற்போது வாக்கு எண்ணிக்கை மையங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர் எதிர்க்கட்சியினர் நீலகிரி தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதி வாக்குப் பெட்டிகள் ஊட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தை திமுகவினர் நாள் ஒன்றுக்கு மூன்று முறை சென்று ஆய்வு செய்து வருகின்றனர்திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் முதன்மை ஏஜென்ட் வழக்கறிஞர் ஆனந்த் தலைமையில் நாள் ஒன்றுக்கு மூன்று முறை சென்று ஆய்வு செய்து வருகின்றனர் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.