மின்கம்பியில் சிக்கிய யானை மரணம் – விதிகளை மீறி போடப்படும் மின்வேலிகளைக் கண்காணிக்க கோரிக்கை!

0 7

விவசாய நிலங்களில் போடப்படும் மின்வேலிகளால் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகின்றன இன்று (23052019) அதிகாலை நெல்லித்துறை காப்புக்காட்டுக்கு அருகே ஒரு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது மேட்டுப்பாளையம் வனச்சரகம் சுண்டப்பட்டி பிரிவு நெல்லித்துறை காப்புக்காடு எல்லையிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ராணிமகாகாரர் பாக்குத் தோட்டம் ஒரு வயது முதிர்ந்த ஆண் யானை அங்கிருந்த ஒரு பாக்கு மரத்தை உடைத்துத் தள்ளும்போது உடைந்து தோட்டத்தை ஒட்டிச்சென்ற மின்கம்பிமீது விழுந்தது விழுந்த மரம் அதையும் சேர்த்து அழுத்தியபோது கம்பிவேலியில் பாய்ந்துகொண்டிருந்த மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது தற்போது கால்நடை மருத்துவர்கள் தன்னார்வ நிறுவனங்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய உள்ளனர்இதுகுறித்துப் பேசிய காட்டுயிர் ஆய்வாளர் சந்துரு கடந்த இரண்டாம் தேதிதான் சிறுமுகையில் ஓர் ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அதற்குள் சிறுமுகைக்கு அருகிலேயே மீண்டும் ஒரு ஆண் யானை மின்வேலியில் மரத்துடன் சேர்ந்து சிக்கியதால் உயிரிழந்துள்ளது மின்வேலிகள் யானைகளுக்கு பேராபத்தாக சத்தமின்றி உருமாறிக்கொண்டிருக்கிறது மசினகுடியிலிருப்பது போலவே அனைத்து மின்வேலிகளும் சூரிய சக்தியில் இயங்குவதாக இருக்க வேண்டும் விதிமீறல்கள் கடுமையான நடவடிக்கைகளால் களையப்பட வேண்டும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தையும் கேரளாவையும் இணைக்கும் மிக முக்கியமான வழித்தடங்களில் இதுவும் ஒன்று அதை உணர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்யானைகளைப் பாதுகாக்கவும் விதிகளை மீறி மின்வேலிகளை அமைத்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பதன்மூலம் மரணங்களைத் தடுக்கவும் போதுமான நடவடிக்கைகளை வனத்துறை துரிதமாகச் செயல்பட்டு எடுக்க வேண்டும் தன்னார்வ நிறுவனங்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்வதோடு நிற்காமல் மீண்டும் இப்படியொரு நிகழ்வு ஏற்படாமலிருக்க உரிய தற்காப்பு நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.