`போராடிப் போராடி மனசு வெறுத்துவிட்டது!’- அதிதி குறித்து அபி சரவணன் விரக்தி

0 16

`பட்டதாரி’ படத்தின் ஹீரோயின் அதிதி மேனன் கடந்த 18-ம் தேதி சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அபி சரவணன் மீது புகார் அளித்திருந்தார். புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிதி மேனன், தனக்கு அபி சரவணன் தரப்பிலிருந்து மிரட்டல் வருவதாகவும் தெரிவித்திருந்தார்.  `பட்டதாரி’ படத்தில் அவருடன் நடித்தபோது நட்பாகி பிறகு அது காதலாக மாறியது. அதன் பிறகு நாங்கள் இருவரும் இணைந்து வாழ்வதாகவும் தவறான செய்திகள் வெளிவந்துள்ளன. அவை யாவும் உண்மையில்லை. என்னைத் திருமணம் செய்துகொண்டதாக காவல் நிலையத்தில் போலிச் சான்றிதழைச் சமர்ப்பித்தார். அதன்பின் என் சமூக வலைதளங்களின் கணக்குகளில் நுழைந்து போலியான ஆவணங்களை அவரே பதிவேற்றியுள்ளார். அதை ஆதாரமாகக் காண்பித்து வருகிறார். அவை யாவும் போலியானது என நிரூபித்திருக்கிறேன். அதனால்தான் புகார் அளிக்க வந்தேன். நான் அவருடைய வீட்டில் எந்தப் பொருள்களையும் திருடவில்லை. யாருடனும் எனக்குத் தொடர்பில்லை” என்றும் கூறியிருந்தார்.அந்தப் புகார் குறித்து அபி சரவணன், `அதிதி மேனன் தன்னைத் திருமணம் செய்துகொண்டு, இன்னொருவருடன் வாழ்கிறார்’ என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதற்கான ஆதாரங்களையும் காட்டிய அவர், ‘என்னுடன் அதிதி மேனன் வாழ என்ன முயற்சி செய்ய வேண்டுமோ அதை செய்யத் தயாராக இருக்கிறேன். அவங்க இல்லாமல் எப்படி வாழ்வதென்றே தெரியவில்லை. என்னுடைய சமூக செயல்பாடுகளையும் கொச்சைப்படுத்திப் பேசிவிட்டார் அதிதி மேனன். அவரைத் தொடர்புகொள்ள எவ்வளவோ முயன்றேன். ஆனால், இதுவரை எந்தவித பதிலும் அவரிடமிருந்து வரவில்லை’ எனக் கூறியிருந்தார். மேலும், ‘அதிதி தரப்பிலிருந்து என்னை ஆள் வைத்துத் தாக்க முயன்றார்கள். அதற்கான வீடியோ ஆதாரமும் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார் அபி சரவணன். கடந்த மாதம் நீதிமன்றத்தில் வாய்தா கேட்டிருந்தார். இதுவரை ஒரு முறைகூட அவர் கோர்ட்டுக்கு வரவில்லை. இந்த வாரம் இரண்டாவது வாய்தாவுக்கு ஆஜராக வேண்டும். வருகிறாரா எனத் தெரியவில்லை.” என்றவர். `அதிதி மேனன் இப்போது வரை அந்தப் பையனுடன்தான் இருக்கிறார். அவரைத் திருமணமும் செய்துகொள்ளவில்லை. என்ன திட்டத்தில் இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. போராடிப் போராடி மனசு வெறுத்துவிட்டது. இனி அவ வந்தா வரட்டும், வரலைனா போகட்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்’ என்றார் அபி சரவணன் விரக்தியில். இது குறித்துக் கேட்க அதிதி மேனனின் மொபைல் எண்ணுக்கு தொடர்புகொண்டேன். அவர் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

Leave A Reply

Your email address will not be published.