“செந்தில் பாலாஜி எங்களை மதிப்பதே இல்லை!” அரவக்குறிச்சியில் கூட்டணிக் கட்சியினர் புலம்பல்!

0 5

கூட்டணி அமைப்பதன் நோக்கம் எல்லாக் கட்சிகளின் ஓட்டுகளைப் பெறத்தான் அதற்கு வேட்பாளர்கள் கூட்டணிக் கட்சிகளின் லோக்கல் புள்ளிகளை அரவணைத்துச் செல்லவேண்டும் என்பது இயல்பு ஆனால் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி `உங்க கட்சிகளுக்கெல்லாம் அரவக்குறிச்சியில் செல்வாக்கு இல்லை39னு எங்களை எடுத்தெறிஞ்சு பேசுறார் எங்க கட்சிக் கொடிகளைப் பிரசார வாகனத்தில் கட்டுவதில்லை பிரசாரத்துக்கு எங்களை முறைப்படி அழைப்பதில்லை அவ்வளவு ஏன் பிரசாரம் நடைபெறும் இடங்கள் பற்றிகூட எங்களுக்குத் தகவல் சொல்வதில்லை மிதப்பா இருக்கும் அவர் எங்களை மதிப்பதில்லை அதன் பலனை அவர் அனுபவிப்பார் என்று குமுறுகிறார்கள் திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி சூலூர் திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது இந்தத் தேர்தலில் திமுக காங்கிரஸ் மதிமுக விடுதலைச் சிறுத்தைகள் இந்திய கம்னியூஸ்ட் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் இந்திய ஜனநாயக கட்சி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணிவைத்து தேர்தலைச் சந்திக்கிறது இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜி `எந்தக் கட்சிக்கும் இங்கே செல்வாக்கு இல்லை39 என்று கூறி கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளை அவமதிப்பதாகப் பரபர குற்றச்சாட்டு எழுந்துள்ளதுஇதுபற்றி நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிலர் “திமுக தலைவர் முகஸ்டாலின் எல்லாக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் உரிய மரியாதையைத் தருகிறார் ஆனா செந்தில் பாலாஜியோ கரூர் மாவட்டக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை அரவக்குறிச்சியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பரவலா இருப்பதைவைத்து அந்தச் சமுதாய கட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறார் குறிப்பா அவர் நாமினேஷன் செய்தபோது அவங்களைத்தான் அதிகமாகத் திரட்டிக்கொண்டு  போனார் ஆனால் பட்டியலின மக்கள் இங்கே அதிகம் வாழுறாங்க அரவக்குறிச்சி தொகுதியின் எங்க கட்சி முக்கிய நிர்வாகிகளையே செந்தில் பாலாஜி பிரசாரத்துக்கு அழைப்பதில்லை அதேபோல் எங்க கட்சிக் கொடியைப் பிரசார வாகனத்துல கட்டாம இருந்தாங்க நாங்க சத்தம் போடவும் கட்டினாங்க அதேபோல் `இந்த ஊர்ல விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு ஓட்டுகூட கிடையாது39னு எங்க காதுபடவே ஒரு முக்கிய ஊரைக் குறிப்பிட்டு செந்தில் பாலாஜி தரப்பு கமென்ட் அடித்தது இதனால் கடுப்பான எங்க கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் அந்த ஊருக்குப் போய் அங்குள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களோடு போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டார்`எங்களுக்கு இந்த நிலைமையா வரணும்39னு நாங்க நொந்துபோய்ட்டோம் நாங்களா அழையா விருந்தாளியா பிரசாரத்துக்குப்  போனாலும் எங்களை வேண்டாவெறுப்பாதான் நடத்துறாங்க இதனால் எங்க மாவட்டச் செயலாளர் ஜெயராமனிடம் குமுறினோம் அவர் அதைக் கண்டுக்கலை ஆனா அவரும் சில நாள்களாகப் பிரசாரத்துக்குப் போகலை கேட்டா `உடம்புக்கு முடியலை39னு பதில் வருது கூட்டணிக் கட்சிக்கு செந்தில் பாலாஜி கொடுக்கும் மரியாதை இதுதானா இதனால் வெறுத்துப்போன பள்ளபட்டியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கூடிப்பேசி `அமமுக வேட்பாளர் பிஹெச்ஷாகுல் ஹமீதை ஆதரிக்கலாமா39னு பேசி இருக்காங்க பள்ளபட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் எங்க கட்சியில் இருக்காங்க செந்தில் பாலாஜியின் பாராமுகத்தால் அவங்க `திமுக-வுக்கு ஓட்டு போடணுமா39னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க சரி எங்களுக்குத்தான் இப்படியானு பார்த்தா அவர் எந்தக் கட்சியையும் மதிப்பதில்லைனு புரிஞ்சுச்சு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஒருவரையே வேட்பாளர் மதிப்பதில்லைனு சொல்றாங்க இரண்டு கம்னியூஸ்ட் கட்சியினரும் `செந்தில் பாலாஜிக்கு நாம தேவையில்லை போலிருக்கு39னு எங்ககிட்ட குமுறுறாங்க அதேபோல் மதிமுக இந்திய ஜனநாயகக் கட்சினு எந்தக் கட்சியினரையும் அவர் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை ஒரு பகுதிக்கு அல்லது கிராமத்துக்கு செந்தில் பாலாஜி பிரசாரத்துக்கு வர்றார்ன்னா அவர் அங்க வந்தபிறகுதான் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கே தெரியவருது ஆரம்பத்தில் `செந்தில் பாலாஜி ஈஸியா ஜெயிச்சுடலாம்39ங்கிறமாதிரி இருந்துச்சு ஆனா நிலைமை இப்போ அப்படி இல்லை அதிமுக வேட்பாளர் விவிசெந்தில்நாதனுக்கு அவர் பிரசாரம் போகும் இடமெல்லாம் செந்தில் பாலாஜிக்குக் கூடுற அளவுக்குக் கூட்டம் கூடுது சில இடங்களில் செந்தில் பாலாஜியைவிட அதிகம் கூட்டம் வருது இன்னொருபக்கம் அமமுக வேட்பாளர் பிஹெச்ஷாகுல் ஹமீது பணத்தைத் தண்ணீராக வாரி இறைக்கிறார் ஓட்டுக்கு இரண்டாயிரம் வீதம் பல பகுதிகளில் விநியோகம் பண்ணிட்டதா சொல்றாங்க அவர் பிரசாரத்திலும் கட்டுக்கடங்கா கூட்டம் கூடுது செந்தில் பாலாஜி பணத்தை மட்டும் நம்பி இருக்கிறார் ஆனா அதிமுக-வும் அமமுக-வும் 5000 ரூபாய் வரைகூட கொடுக்கத் தயாராக இருப்பதாகச் சொல்றாங்க இந்த நிலையில் இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுறமாதிரி கூட்டணிக் கட்சிகளை அரவணைச்சு செல்லாததால கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளை செந்தில் பாலாஜி கணிசமான அளவு இழக்க நேர்ந்தாலும் நேரலாம் இதனால் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சுணக்கமாக உள்ளனர் தேர்தல் வேலையைப் பார்க்காமல் பல கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் சொந்த வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க செந்தில் பாலாஜியோ திமுக முன்னாள் அமைச்சர்களையும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணியையும் மட்டுமே பிரசார வாகனத்தில் அழைச்சுக்கிட்டுப் போறார் ஆனா எங்களை மதிக்காத செந்தில் பாலாஜி `தம்மை திமுக-வின் கேசிபி-யும் முன்னாள் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனும் மதிக்கலை39னு ஸ்டாலின் வரை பஞ்சாயத்து கொண்டுபோறார் ஆனா பரம்பரை திமுக-வினரை மதிக்காமல் தன்னோடு அமமுக-விலிருந்து வந்தவங்களுக்குத்தான் மரியாதை தர்றதா திமுக தொண்டர்களே புலம்புறாங்க எங்க நிலைமையைத் தேர்தல் பொறுப்பாளர் பொன்முடிகிட்டகூடப் புலம்பிப் பார்த்துட்டோம் ஒண்ணும் நடக்கலை செந்தில் பாலாஜி ஜெயித்தால் என்ன இல்லை தோத்தால் எங்களுக்கு என்ன என்றார்கள் விரக்தியாகஇதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயராமனிடம் பேச முயன்றோம் பலமுறை தொடர்புகொண்டும் நமது அழைப்பை அவர் ஏற்கவே இல்லை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பிரசாரத்தில் பிஸியாக இருப்பதால் அவரிடமும் பேச முடியவில்லை அவர் சார்பில் நம்மிடம் பேசிய அவரது ஆதரவாளர்கள் சிலர் “செந்தில் பாலாஜியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாயிட்டு அதைப் பொறுக்காத அதிமுக-வினர் செந்தில் பாலாஜிக்கு எதிராகப் பல பிரச்னைகளைக் கிளப்பத் தொடங்கி இருக்கிறார்கள் சம்பந்தமே இல்லாமல் கோகுல் என்பவரை செந்தில் பாலாஜி கடத்திவிட்டதாக அவரது தாயார் தெய்வானை என்பவரைவிட்டு செந்தில் பாலாஜிக்கு எதிராகப் பேட்டி கொடுக்கவைத்தார்கள் அடுத்து செந்தில் பாலாஜி பற்றி கேவலமாகச் சித்திரித்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் வெளியிட்டு வருகிறார்கள் இன்னொரு டீம் எதையாவது பிரச்னை செய்து இந்த இடைத்தேர்தலையே நிறுத்திவிட முயற்சி பண்ணிகிட்டு இருக்கு இதற்கிடையில் உள்நாட்டுக் கலவரத்தைக் கிளப்புவதுபோல் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குள் புகைச்சலைக் கிளப்ப முயற்சி செய்கிறார்கள் அதோட வெளிப்பாடுதான் இது மத்தபடி கூட்டணிக் கட்சிகளின் சாதாரண தொண்டனுக்குக்கூட உரிய மரியாதையைக் கொடுத்து வருகிறார் செந்தில் பாலாஜி இந்தத் தொகுதியில் ஜெயிப்பது அவருக்கு கௌரவ பிரச்னை அப்படி இருக்கையில் அதற்குப் பலம் சேர்க்கிற கூட்டணிக் கட்சிகளை அவர் எப்படி அவமானப்படுத்துவார் அதிமுக-வினரின் எந்தச் செயலும் இங்கே செல்லுபடியாகாது என்றார்கள் கூட்டணிக் கட்சிகளை செந்தில் பாலாஜி மதித்தாரா என்பது மே 23-ம் தேதி தெரிந்துவிடும்

Leave A Reply

Your email address will not be published.