தாய்லாந்துக்கு அடுத்த பெரிய சந்தை! – ஜவ்வரிசி தயாரிப்பில் கெத்துக்காட்டும் சேலம் #MyVikatan

0 5

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது இவை பெரும்பாலும் சேலம் மாவட்டத்திலேயே சந்தைப்படுத்தப்படுகிறது  சேலத்தில் இருக்கும் சேகோ ஆலைகள் மரவள்ளிக் கிழங்குகளை வாங்கி ஜவ்வரிசியாகவும் ஸ்டார்ச் மாவாகவும் தயாரிக்கப்படுகிறது இவை சேலம் சேகோ சர்வ் நிறுவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது சேலம் சேகோ சர்வ் நிறுவனம் தமிழகத்தின் தலைமையிடமாகவும் தாய்லாந்துக்கு அடுத்த பெரிய சந்தையாகவும் திகழ்கிறது  ஜவ்வரிசி ஸ்டார்ச் மாவு வெளி மாநிலங்களில் முக்கிய உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது ஜவ்வரிசி முழுக்க முழுக்க உணவுப் பொருளாகவும் ஸ்டார்ச் மாவில் இருந்து அப்பளம் சாக்லேட் தயாரிக்கவும் மருத்துவத்துறையில் குளுக்கோஸ் டெக்ஸ்ட்ரோஸ் தயாரிப்பதற்கும் புதுத் துணிகளுக்கு கஞ்சி போடுவதற்கும் பசையாகவும் பயன்படுத்தபடுகிறது இதன் தேவைகள் அதிகமாகவே இருக்கிறது இத்தொழிலை நம்பி பல லட்சம் விவசாயிகளும் தொழிலாளிகளும் இருக்கிறார்கள் ஒரு நாளைக்கு சேலம் செகோ சர்வ் நிறுவனத்தில் குறைந்தது 2 கோடி முதல் 5 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது  

Leave A Reply

Your email address will not be published.