`கமல் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்!’ – ஹெச்.ராஜா

0 7

இந்து தீவிரவாதம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் வைரமுத்து கதிதான் அவருக்கும் ஏற்படும் என்று கூறியிருக்கிறார் பிஜேபி-யின் தேசியச் செயலாளர் ஹெச்ராஜா“சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து அவர் பெயர் நாதுராம் கோட்சே3939 என்று அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியிருக்கிறார் பல தரப்பிலும் எதிர்ப்பைச் சந்தித்த கமலின் இந்தப் பேச்சுக்கு இந்து அமைப்பினர் முதல் பிஜேபி வரை பலரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் கமல் மீது தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கமல் மீது வெறுப்பை உமிழும் விதமாகப் பேசியிருக்கிறார் “முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம்3939 என பிஜேபி தேசியச் செயலாளர் ஹெச்ராஜா ஏற்கெனவே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார் இந்நிலையில் இன்று கொடைக்கானலில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்ராஜா “கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல அவர் ஆன்டி மனிதகுலம் கமலின் இந்து தீவிரவாதி குறித்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் வைரமுத்துவுக்கு எழுந்ததுபோல் கமலுக்கும் எதிர்ப்பு உருவாகும்3939 என்றார்

Leave A Reply

Your email address will not be published.