“சட்டையைப் பிடித்துத் தள்ளினார்!” – பேராசிரியர் கல்யாணியைத் தாக்கிய சப் இன்ஸ்பெக்டர்

0 11

காவல்துறை தாக்குதலுக்குள்ளான பழங்குடி இளைஞருக்கு உதவச் சென்றதற்காகப் பேராசிரியர் கல்யாணி தாக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதுதமிழகத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான பேராசிரியர் கல்யாணி பழங்குடி இருளர் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருபவர் காவல்துறையினரால் தாக்கப்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆதரவாகப் புகார் அளிக்கச் சென்றதால் இவரின் சட்டையைப் பிடித்துத் தள்ளி பொய் வழக்கு போட்டு அவமதித்திருக்கிறது விழுப்புரம் மாவட்டக் காவல்துறை பேராசியர் கல்யாணி கைது செய்யப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து பொய் வழக்கு ஒன்றைப் பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்`என்னதான் நடந்தது39 என்று கல்யாணியிடம் பேசினோம் “விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பொம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் தம்பதியினர் மோகன்-ரோஜா இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாகக் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது இந்நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றது தொடர்பாக மோகனுக்கும் அவரின் உறவினரான மணிகண்டன் என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது அதைத் தொடர்ந்து மணிகண்டனுக்கு ஆதரவாக அதே ஊரின் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் மோகனையும் அவரின் 15 வயது இளைய மகளையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார் அதனால் மறுநாள் காலையில் மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவெடுத்திருக்கிறார் மோகன் ஆனால் இரவோடு இரவாகப் பெரியண்ணன் மற்றும் மணிகண்டனின் தூண்டுதலால் மயிலம் காவல் நிலையத்தில் மோகன் மீது ஒரு பொய்ப் புகாரை அளிக்கிறார் அவரின் மனைவி ரோஜா அதனடிப்படையில் அன்று இரவே மோகனைக் கைது செய்ததோடு கடுமையாகத் தாக்கி சித்ரவதை செய்து விடியற்காலையில் விடுவித்திருக்கிறார் மயிலம் எஸ்ஐ விவேகானந்தன் படுகாயங்களுடன் என்னிடம் வந்த மோகனை உடனே திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தேன் சட்டத்துக்குப் புறம்பாக மோகனைத் தாக்கிய எஸ்ஐ மீது புகார் கொடுக்கக் கையெழுத்து வாங்குவதற்காக நானும் முருகப்பனும் இன்று காலை மருத்துவமனைக்குச் சென்றோம்அங்கு சிகிச்சைப் பெற்று வரும் மோகனிடம் புகாரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வெளியே வந்தோம் அப்போது தனியார் சுமோ வாகனம் ஒன்றில் அங்கு வந்த எஸ்ஐ விவேகானந்தன் எங்கள் இரண்டு பேரையும் வண்டியில் ஏறச் சொன்னார் நாங்கள் ஏன் வண்டியில் ஏற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தபோதே என் சட்டையைப் பிடித்து இழுத்து அந்த சுமோ வாகனத்துக்குள் தள்ளினார் அப்போது அதனுள் இருந்த சீட்டில் விழுந்ததால் எலும்புகள் முறியாமல் தப்பித்தேன் முருகப்பனையும் அப்படியே செய்தார் எங்களை ஏற்றிக்கொண்டு திண்டிவனம் நகர் முழுக்கச் சுற்றிவிட்டு மயிலம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார்அந்தக் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை இருக்கிறது அவர்களின் நன்மைக்காகத்தான் நான் மோகனை அடித்தேன் என்றார் எஸ்ஐ யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது வழக்கு போடுவதை நான் என்றும் தடுத்ததில்லை சட்டத்துக்குப் புறம்பாக அவர்களை அடிப்பதைத்தான் தவறு என்று தொடர்ந்து கூறிவருகிறேன் 700-க்கும் மேற்பட்ட வழக்குகளைச் சந்தித்திருக்கிறேன் இவர்கள் போடும் பொய் வழக்குகள் எதுவும் நிற்காது என்று எனக்குத் தெரியும் ஆனால் ஒருவரை அடிப்பதைவிடக் கொடுமையானது அவரை அவமானப்படுத்துவது அத்தகைய செயலைத்தான் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம் இன்று அதைத்தான் எங்களுக்குச் செய்து காட்டினார் அந்த எஸ்ஐ” என்றார்பேராசியர் கல்யாணி கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு சமூக அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனஇதுகுறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் பேசினோம் “பேராசிரியர் கல்யாணி மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை அவர் மீது சிஎஸ்ஆர் மட்டுமே பதியப்பட்டிருக்கிறது3939 என்றார்

Leave A Reply

Your email address will not be published.