‘பக்தர்கள் வெள்ளத்தில் பவனிவந்த கெங்கையம்மன் சிரசு!’ – குடியாத்தத்தில் கோலாகலம்

0 11

புகழ்பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் ‘சிரசு’ திருவிழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் சிரசு மிதந்துவந்த காட்சி பிரமிப்பாக அமைந்ததுதமிழகத்தில் பிரசித்திபெற்ற அம்மன் கோயில் திருவிழாக்களில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள கெங்கையம்மன் கோயில் சிரசுத் திருவிழாவும் ஒன்று இக்கோயில் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது கடந்த 11-ம் தேதி அம்மனுக்குத் திருக்கல்யாண உற்சவமும் நேற்று தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர் மிளகு கலந்த உப்பைத் தேர் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர் சிறப்பம்சமான ‘சிரசு’ பெருவிழா இன்று கொண்டாடப்பட்டுவருகிறது இன்று அதிகாலை 4 மணிக்குத் தாரை தப்பட்டை மேள தாளங்கள் முழங்க அம்மனுக்குச் சீர்வரிசை எடுத்துவரப்பட்டது பின்னர் தரணம்பேட்டை முத்தாலம்மன் கோயிலில் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு சிரசு ஊர்வலம் புறப்பட்டது லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பவனிவந்த சிரசு கோபாலபுரம் வழியாகக் கெங்கையம்மன் கோயிலைச் சென்றடைந்ததுஊர்வலத்தின்போது அம்மன் சிரசு மீது பக்தர்கள் மலர்கள் பூமாலைகள் தூவி வரவேற்றனர் வழிநெடுகிலும் தேங்காய் உடைத்து வழிபட்டனர் அம்மன் சிரசு கோயிலுக்கு வந்ததும் சிரசு மண்டபத்தில் உள்ள சண்டாளச்சி அம்மன் உடலில் பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அதன் பிறகு கெங்கையம்மன் சாந்த சொரூபியாக மாறி பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார் இன்றிரவு சண்டாளச்சி அம்மன் உடலில் இருந்து சிரசு பிரிக்கப்பட்டு கௌண்டன்ய மகா நதியின் வழியாகப் புங்கனூர் அம்மன் கோயிலை அடைகிறது அப்போது கௌண்டன்ய நதிக்கரையில் கண்ணைக் கவரும் சிறப்பு வாணவேடிக்கை நடைபெறும் சிரசு திருவிழாவையொட்டி வேலூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகளும் குடியாத்தத்துக்கு இயக்கப்பட்டுவருகின்றன பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன

Leave A Reply

Your email address will not be published.