போட்டோவுக்காக மாணவனிடம் கெஞ்சிய டென்னிஸ்வீராங்கனை – தோழியுடன் சிறைக்குச் சென்ற நண்பர்கள்

0 5

சென்னையில் நடந்த கடத்தல் சம்பவம் சினிமாவை விஞ்சும் வகையில் அமைந்துள்ளது பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவனை ஆள்வைத்துக் கடத்தி ஐ போன் மற்றும் வாட்ச்சைப் பறித்த வழக்கில் டென்னிஸ் வீராங்கனை உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் காதல் விவகாரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது சென்னைக் கீழ்ப்பாக்கம் ராமநாதன்தெருவைச் சேர்ந்த காசிம் முகமது என்பவரின் மகன் நவீத் அகமது கடந்த 10-ம் தேதி சென்னை டிபிசத்திரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார் அதில் கூறியிருப்பதாவது “நான் மேற்கண்ட முகவரியில் பெற்றோருடன் வாடகை வீட்டில் குடியிருந்துவருகிறேன் என் தந்தை ரெட்ஹில்ஸ்ஸை அடுத்த எடப்பாளையம் என்ற இடத்தில் டீத்தூள் பாக்கெட் பிசினஸ் செய்துவருகிறார் நான் கடந்த ஆண்டு சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்தேன் தற்போது ஒரு மாதகாலமாக அப்பாவின் தொழிலுக்கு உதவியாக இருந்துவருகிறேன்கடந்த 952019-ம் தேதி இரவு 1115 மணிக்கு என் நண்பர் வீட்டுக்கு பைக்கில் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன் எங்கள் வீட்டின் அருகே அடையாளம் தெரியாத மூன்றுபேர் முகத்தை துணியால் மூடியபடி என்னை வழிமறித்தனர் அதில் ஒருவர் கையில் கத்தியை வைத்து `வாசவியை லவ் பண்ணிட்டு ஏன்டா அவளை அடிச்ச39 எனக் கூறியபடி என்னை மிரட்டி பைக்கைவிட்டு கீழே இறங்கும்படி கூறினார் நான் என்ன நடந்தது என்று அந்த நபரிடம் கூற முயன்றபோது அந்த நபருடன் வந்த மற்றவர்கள் கையில் கட்டையை வைத்துக்கொண்டு என்னை வண்டியில் ஏறச் சொன்னார்கள் வண்டியில் ஏறவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர் இதனால் வேறுவழியில்லாமல் என் பைக்கில் ஏறினேன் என்னை மிரட்டியவர்களில் ஒருவர் பைக்கை ஓட்டினார் எனக்குப் பின்னால் இன்னொருவர் அமர்ந்திருந்தார்அண்ணாநகர் வழியாக பாடிக்குச் சென்றனர் அப்போது என்னை உயிரோடு விட வேண்டும் என்றால் 2 லட்சம் ரூபாய் கேட்டனர் அதனால் அப்பா கடையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு போன் செய்து பணத்தை பாடி பாலம் அருகே கொண்டு வரும்படி கூறினேன் ஆனால் அவர் வர நேரமானது இதனால் முகப்பேர் கொளத்தூர் அமைந்தகரை எனச் சில இடங்களுக்கு பைக்கில் அழைத்துச் சென்றனர் பிறகு பரங்கிமலையில் உள்ள காலி மைதானத்தில் பைக்கை நிறுத்தினர் பிறகு அங்கு என் வயிற்றில் கத்தியை வைத்தபடியே வாட்ச் மற்றும் ஐ போன் ஆகியவற்றைப் பறித்தனர் அப்போது `பணத்தை ரெடி பண்ண முடியல ஆனால் ஏமாந்த பெண்ணை லவ் பண்ற பேருல அவ பணத்தைச் செலவு செஞ்சுகிட்டு இருக்கியா39 என்று கூறினர் பிறகு கத்தியை வைத்திருந்தவர் `பாஸ்கரன் நீ கத்தியை வைத்து அவனை மிரட்டுவதால் எந்தப் பயனும் இல்லை நானும் உன் தம்பி லெனினும் இவனைக் கட்டையால் அடித்தால்தான் திருப்தியாக இருக்கும்39 என்று கூறினார் அப்போது இன்னொரு பைக்கில் வந்த லெனின் சரவணன் சொல்வதுதான் சரி என்று கூறினார்இதையடுத்து வண்டியிலிருந்து இறங்கியவர்கள் என்னை சரமாரியாகத் தாக்கினர் பிறகு கத்தியைக் காட்டி மிரட்டியபடி போலீஸிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர் இதற்கிடையில் பைக்கில் நாங்கள் மூன்று பேர் வந்தபோது போலீஸ்காரர் ஒருவர் எங்களை மடக்கினார் அப்போது போலீஸ்காரரிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு தப்பினர் இதையடுத்து அவ்வழியாக வந்த ஒருவரின் போன் மூலம் என் சகோதரருக்கு தகவல் தெரிவித்தேன் இதையடுத்து அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்னைத் தாக்கி செல்போன் மற்றும் வாட்ச்சை பறித்ததோடு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிஸ் 4 பிரிவுகளின் கீழ் பாஸ்கரன் லெனின் சரவணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தார் இதையடுத்து இந்த வழக்கில் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகினஇதுகுறித்து போலீஸார் கூறுகையில் “நவீத் அகமது கொடுத்த புகாரின்பேரில் அவர் கூறிய இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம் அப்போது நவீத் அகமதுவை சிலர் தாக்கிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன அவர்கள் யாரென்று விசாரித்து பாஸ்கரன் லெனின் சரவணன் அபிஷேக் கோகுல் ஆகியோரை கைது செய்தோம் அவர்களிடம் விசாரித்தபோதுதான் வாசவி குறித்த தகவல் தெரியவந்தது நீலாங்கரையைச் சேர்ந்த வாசவி புரசைவாக்கத்தில் பள்ளிப்படிப்பை படித்துள்ளார் அப்போதுதான் வேளச்சேரியைச் சேர்ந்த பாஸ்கரன் லெனின் சரவணன் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த நவீத்அகமது மற்றும் அபிஷேக் கோகுல் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டுள்ளது நவீத் அகமதுக்கும் வாசவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது இருவரும் பார்க் தியேட்டர் எனச் சென்றுள்ளனர் அப்போது இருவரும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர் இந்த நிலையில் நவீத் அகமதுவின் சில நடவடிக்கைகள் வாசவிக்குப் பிடிக்காமல் போனது இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது  இதையடுத்து நவீத் அகமதுவின் ஐ போனில் இருந்த வீடியோ மற்றும் போட்டோக்களால் சிக்கல் ஏற்பட்டுள்ளது இதனால் வாசவி தன்னுடைய நண்பர்கள் பாஸ்கரன் லெனின் சரவணன் அபிஷேக் கோகுல் ஆகியோரிடம் நவீத் அகமது குறித்து கூறியுள்ளார் அதோடு நவீத் அகமதுவின் ஐபோனை எப்படியாவது வாங்கித்தரும்படி தெரிவித்துள்ளார் இதனால்தான் அவர்கள் 5 பேரும் சேர்ந்து நவீத் அகமதுவை கடத்தி செல்போனைப் பறித்துள்ளனர் பிறகு செல்போனை உடைத்ததோடு அமைந்தகரையில் உள்ள கூவம் ஆற்றில் வீசியுள்ளனர் வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலரின் மகன் பாஸ்கரன் இவர் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தடுப்பு வேலியை சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற சர்ச்சையிலும் சிக்கியவர் கடத்தல் சம்பவத்தில் மாணவன் ஒருவர் தலைமறைவாக உள்ளார் வாசவி டென்னிஸ் வீராங்கனை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார் தற்போது அவர் அமெரிக்காவில் படித்துவருகிறார் அங்கேயே டென்னிஸ் பயிற்சியைப் பெற்றுவருகிறார் கடத்தல் சம்பவத்தில் நண்பர்கள் சிக்கியதும் வாசவி அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டார் இதற்காக நேற்று அவர் விமான நிலையத்துக்கு வந்தபோது அவரைப் பிடித்து கைது செய்தோம் என்றனர்  சினிமாவை விஞ்சும் வகையில் நடந்த இந்தக் கடத்தல் சம்பவத்தில் போலீஸாரின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை ஏனெனில் பாஸ்கரன் காவல் துறையைச் சேர்ந்த ஒருவரின் மகன் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் முதலில் தயக்கம் காட்டியுள்ளனர் அடுத்து வாசவிக்கு ஆதரவாக சிலர் போலீஸாரிடம் பேசினர் இதனால் முதலில் அவரைக் கைது செய்யாமல் போலீஸார் எச்சரித்து மட்டும் அனுப்பி வைத்துள்ளனர் ஆனால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் வேறுவழியின்றி வாசவி மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் உண்மையில் ஐ போனில் உள்ள போட்டோக்கள் வீடியோக்களை நவீத் அகமதுவிடமிருந்து பெற வாசவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தால் இந்த வழக்கின் கோணமே மாறியிருக்கும் வாசவி மற்றும் அவரின் நண்பர்கள் நவீத் அகமதுவை கடத்தியதால் சிக்கலில் சிக்கி சிறைக்கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர் 

Leave A Reply

Your email address will not be published.