மண் சட்டியில் பழையசோறு! – மதுரை ஹோட்டல் உருவாக்கியுள்ள புது டிரெண்ட் #MyVikatan

0 4

துரித உணவை அதிக விலை கொடுத்து வாங்குவது நோயையும் விலைகொடுத்து வாங்குவதற்குச் சமமாக பார்க்கப்பட்டாலும் சுவைக்காக சிலர் அதைத் தொடர்ந்து உண்ணுகின்றனர்ஆனால் பாதிப்பு ஏற்பட்டதற்குப் பின் நல்ல உணவைத் தேடி அழைக்கின்றனர் இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு முன்பாக சுவையாக பழைய சோறு கிடைப்பதால் பலரும் ஆர்வமாகச் சாப்பிட்டுவருகின்றனர் மதுரை மாட்டுத்தாவணி  எதிர்ப்புறம் உள்ள நெல்லுப்பேட்டை ஹோட்டலில் நாட்டுப் பொன்னி அரிசியில் தயார் செய்யப்பட்ட பழைய சோற்றை நீராகாரத்துடன்  மண்பாத்திரத்தில் குளிர்ச்சியுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது  முதல் நாள் தயார் செய்யப்பட்ட உணவை மோருடன் கலந்து மண் பானையில் பதப்படுத்தி வைத்து காலை முதல் மாலை வரை விற்பனை செய்யப்படுகிறது பழையசோற்றுடன் தயிர் வெங்காயம் மிளகாய் வத்தல்  உள்ளிட்டவையும் சேர்த்து 50 ரூபாய்க்கு விற்பனை  செய்வதால் அதிகளவில் விற்பனையாகிறது உடல் உஷ்ணம் குறைக்க நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்திட வயிற்றுக் கோளாறு நீங்க உள்ளிட்ட பல்வேறு விதமான ஆரோக்கியத்துக்காக தற்போது மீண்டும் பழைய சோறு சாப்பிட ஆர்வம் காட்டுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்

Leave A Reply

Your email address will not be published.