மரங்கள் மேல கை வைக்கவே கூடாது! – பெருங்காட்டுக் காளியின் கன்ட்ரோலில் மதுரை கிராமங்கள் #MyVikatan

0 4

மதுரை மேலூரை அடுத்த மாங்குலப்பட்டிப் பகுதியில் பெருங்காட்டு காளி கோயில் உள்ளதுஇங்கு பல ஏக்கரில்  பழைமையான பெரிய மரங்கள் உள்ளன இதை யாரும் வெட்டக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது மீறி வெட்டினாலோ விறகுகளைத் திருடிச்சென்றாலோ அவர்களது வீட்டுக்குப் பாம்புவந்துவிடும் என்ற நம்பிக்கை இதனால் கோயிலைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினரும் இங்கு சிறிய விறகைக்கூட வீட்டுக்கு எடுத்துச் செல்வதில்லைஎத்தனை வருடங்கள் ஆனாலும் அந்த விறகுகளை யாரும் எடுத்துச்செல்லக்கூடாது இந்த நம்பிக்கையால் கோயிலைச் சுற்றி பல மரங்கள் வளர்ந்து நிற்கின்றன கோயில் பெரிய அளவு இல்லை என்றாலும் அப்பகுதி மக்களின் நம்பிக்கை பெரியதாக உள்ளது அரிவாள் வேல் உள்ளிட்ட இரும்பு ஆயுதங்களும் பட்டியகற்களும் அதைச் சுற்றி பழைமையான மரங்கள் சூழ்ந்ததுதான் இந்தக் கோயின் அமைப்பு இந்த வழியாகச் செல்லும் மக்கள் கையெடுத்து வணங்கிய பின்புதான் செல்வார்கள் பயங்கர சக்திகொண்ட தெய்வமாக அப்பகுதி மக்களால் பெருங்காட்டு காளி பார்க்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.