விஷம் வைத்துக் கொன்ற மனிதர்கள்; இறந்தும் குட்டிகளைக் காப்பாற்றிய குரங்குகள்… நீலகிரி சோகம்!

0 4

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து 10 கிமீதொலைவில் அமைந்துள்ளது கீழ் கோத்தகிரி தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் பல கிராமங்கள் உள்ளன கீழ் கோத்தகிரியின் சிறிய பள்ளத்தில் அமைந்துள்ளது அம்மன் நகர் சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் இடையே சிறிய அளவிலான விளைநிலங்கள் நடுவில் ஓர் ஓடை ஆங்காங்கே வானுயர்ந்த மரங்கள் என இயற்கை எழில்கொஞ்சும் இந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவுபல ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு உணவு தேடி வந்த குரங்குக் கூட்டம் ஒன்று இந்தப் பகுதியிலேயே தஞ்சமடைந்துவிட்டது அம்மன் நகர் குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் பகல் முழுக்க உணவு தேடித்திரிவது மாலையில் வந்து இங்குள்ள சுமார் 50 அடி உயர சில்வர் ஓக் மரத்தில் ஓய்வெடுத்து மீண்டும் பொழுது விடிந்தவுடன் கிளம்புவது போன்றவற்றையே அந்தக் கூட்டம்  வாடிக்கையாகக் கொண்டிருந்ததுசுமார் 60-க்கும் அதிகமான குரங்குகள் குட்டிகளுடன் இங்கே கூட்டமாக உலவிவந்தது அவ்வப்போது உணவு தேடி குடியிருப்புக்குள் நுழைவது கிடைக்கும் பொருள்களை தூக்கிச் செல்வது எனவும் இருந்துள்ளது இந்நிலையில் நேற்று பகல் முழுக்க உணவு தேடி  சுற்றித்திரிந்த குரங்குகள் பொழுது இருட்டவும் வழக்கம்போல் குடியிருப்பு அருகில் இருக்கும் மரத்துக்கு வந்துள்ளன இரவு 8 மணியளவில் திடீரென மர உச்சியிலிருந்து ஒவ்வொரு குரங்காகக் கீழே விழுந்துள்ளது சில குரங்குகள் குட்டியுடன் பல அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தன இதில் சில இறந்தன சில மயக்க நிலையில் இருந்தன இதைக் கண்ட ஊர் பொதுமக்கள் குரங்குகளைத் தூக்கி காப்பாற்ற முயற்சி செய்தனர் உடனடியாக வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர் இதில் பிறந்து சில தினங்களே ஆன நிலையில் இருந்த 4 குட்டிகளை உயிருடன் மீட்டனர் ஆனால் துரதிர்ஷ்ட வசமாக 6 பெண் குரங்குகள் மற்றும் 3 ஆண் குரங்குகள் என மொத்தம் 9 குரங்குகள் இறந்தனஇந்தச் சம்பவத்தை முதலில் பார்த்த அம்மன் நகரைச் சேர்ந்த சரசுவதி கூறுகையில் “கடந்த பல ஆண்டுகளாக இந்தக் குரங்குகள் இந்த மரத்தில்தான் வந்து தூங்கும் பகலில் எங்குச் சுற்றித்திரிந்தாலும் இரவில் இங்கு வந்துவிடும்நேற்று இரவு 8 மணியளவில் சத்தம் கேட்டது வெளியில் வந்து பார்த்தபோது உயர்ந்த மரத்திலிருந்து கூட்டம் கூட்டமாகக் குரங்குகள் மயங்கிய நிலையில் கீழே விழுந்தன சில குரங்குகளுக்குக் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது நாங்கள் தூக்க அருகில் சென்றதும் வலியால் கத்தின உடனே அருகில் இருந்த சில இளைஞர்களை அழைத்தோம் பின்னர் அவர்கள் வந்து மீட்டனர் என்றார் மரத்திலிருந்து விழுந்த குரங்குகளை மீட்ட இளைஞர் அசோக் கூறுகையில் “திடீரென மரத்திலிருந்து குரங்குகள் ஒவ்வொன்றாகக் கீழே விழுகின்றன எனச் சொன்னார்கள் அங்கே சென்று பார்த்த போது 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் கீழே கிடந்தன அதில் நான்கு குரங்குகள் குட்டிகளுடன் கிடந்தன முதலில் குட்டிகளுடன் கிடக்கும் குரங்குகளை தூக்க முயன்றோம் உயர்ந்த மர உச்சியிலிருந்து விழுந்து தாய் குரங்குகளுக்குக் காயம் ஏற்பட்டிருந்தது ஆனால் அவை கட்டிப்பிடித்திருந்த குட்டிகளுக்கு ஒன்றும் ஆகவில்லை அவற்றைத் தாய் குரங்குகள் பத்திரமாகப் பிடித்திருந்தன இறந்த தாய் குரங்கை பற்றிப் பிடித்திருந்த குட்டிகளைப் பிரிக்க முயற்சி செய்தோம் முடியவில்லை பின்னர் இருவர் மூவராகச் சேர்ந்து குட்டிகளை இறந்த தாய் குரங்குகளிடமிருந்து பிரித்து கம்பளிகளைப் போர்த்தி பாதுகாத்தோம் இவ்வளவு உயர மரத்திலிருந்து விழுந்தும் குட்டிகளுக்கு சிறிய காயம்கூட ஏற்படாதது ஆச்சர்யம்தான்” என்றார் வனத்துறையினர் தெரிவிக்கையில் ஊர்மக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தோம் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது இறந்து கிடந்த மற்றும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த குரங்குகளை மீட்டு வந்தோம் இதில் 6 பெண் குரங்குகள் 3 ஆண் குரங்குகள் என மொத்தம் 9 குரங்குகள் இறந்துள்ளன மேலும் தாய் குரங்குகள் இறந்த நிலையில் பிறந்து சில நாள்களே ஆனா நான்கு குட்டிக் குரங்குகளை மீட்டோம் அவற்றுக்குப் பாட்டில் மூலம் பால் புகட்டி வருகிறோம் ஏதோ நஞ்சு கலந்த உணவைத் தின்றதால் இந்தக் குரங்குகள் இறந்திருக்கக்கூடும் கால்நடை மருத்துவர்களைக் கொண்டு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டோம் உடல் மாதிரிகள் கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி முடிவுகள் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்வோம் என்றனர்இதுகுறித்து காட்டுயிர் ஆர்வலர் ராமமூர்த்தி கூறுகையில் “சமூக விலங்கான குரங்குகள் கூட்டமாக இறந்திருப்பது மிக மோசமான சம்பவம் அதிகளவு விதைப்பரவலுக்கு முக்கியப் பங்காற்றும் குரங்குகள் காட்டில் கிடைக்கும் உணவைத்தின்று சாவதற்கான வாய்ப்பே இல்லை நிச்சயம் மனிதத் தவறுகளால்தான் இப்படி ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றுள்ளது குரங்குகள் இறப்புக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்   

Leave A Reply

Your email address will not be published.