மலைச்சாமிக்கு மூணு பிடி மண் போதும்! – மதுரையில் இப்படியும் ஒரு திருவிழா #MyVikatan

0 12

கண்மாய்களைத் தூர்வாரும் பழக்கத்துடன் இணைந்துள்ளது மலைச்சாமி கோயில் திருவிழா மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டி பெருமாள் மலை அடிவாரத்தில் மலைச்சாமி கோயில் உள்ளது இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறதுஇங்கு உள்ள சேங்கைக் குளத்தில் மண்ணைக் கையில் அள்ளி வந்து மூன்று முறை கொட்டினால் வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவதாக நம்பிக்கை இதனால் திருவிழா அன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வந்து இவ்வாறு வழிபடுகின்றனர் மணலே மலை போலக் காட்சியளிக்கிறது சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண் மலை கரையாமல் உள்ளது மேலும் கண்மாயில் தூர்வாரும் தேவையும் நிறைவு செய்யப்படுகிறது இறைப் பணியுடன் இணைந்து சமூகப் பணியும் செய்யப்படுகிறது இந்த மலைச்சாமி கோயில் படிகளால் கட்டப்பட்டு வழிபடப்படுகிறதுமலையைக் கடவுளாக நினைப்பதால் மலைச்சாமி மலை அரசு மலையம்மாள் மலையரசி மலைராஜன் மலைராசு என்று தங்களது குழந்தைகளுக்குப் பெயர் வைக்கின்றனர் மலைச்சாமி கோயிலுக்கு மணலை மலை போலக் குவிக்கும் இவர்களது வேண்டுதல் மிகப்பெரும் நம்பிக்கையாக உள்ளது மேலும் இவ்வாறு செய்வதால் மழைநீரைச் சேகரிக்க தூர்வாருதலின் அவசியம் குறித்து முன்னோர்களால் வகுக்கப்பட்டதை தாங்கள் கடைப்பிடிப்பதாகக் கிராமத்தினர் பெருமிதம் தெரிவிக்கின்றனர் மலைச்சாமி கோயிலுக்கு கரும்பு மிகப்பெரும் பிரசாதம் திருவிழா அன்று கரும்பு வியாபாரம் தூள் பறக்கும் 

Leave A Reply

Your email address will not be published.