`எப்போதும் சந்தோஷமாக வாழுங்கள்!’- இப்படிக் கூறிய தந்த்ரா மாஸ்டர் தற்கொலை செய்தது ஏன்?

0 6

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த தந்த்ரா மாஸ்டர் குடும்பத்துடனும் சரண்யா என்ற பெண்ணுடனும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார் 4 பேரும் விஷம் குடித்த நிலையில் மாஸ்டர் மட்டும் இறந்துவிட்டார் மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது `எப்போதும் சந்தோஷமாக வாழுங்கள்39 என வழிகாட்டிய மாஸ்டர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீஸார் விசாரித்துவருகின்றனர்சென்னை திருவல்லிக்கேணி முகமது அப்துல்சாகிப் தெருவில் உள்ள விடுதியில் உள்ள அறை எண் 102ல் தங்கியிருந்த 4 பேர் நீண்ட நேரமாக கதவைத் திறக்கவில்லை இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீஸார் விடுதிக்குச் சென்றனர் கதவை உடைத்து போலீஸார் உள்ளே சென்று பார்த்தபோது அப்போது அறையில் மயங்கிய நிலையில் 4 பேர் கிடந்தனர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர் விசாரணையில் மயங்கி கிடந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியைச் சேர்ந்த ஜெகத் பிராங்கிளின் (30) அவரின் மனைவி புனிதா ராணி (29) இவர்களின் மகள் ஜெசிபி (6) மற்றும் சரண்யா (21) எனத் தெரியவந்தது மேல்சிகிச்சைக்காக ஜெகத் பிராங்கிளின் புனிதா ராணி சரண்யா ஆகியோர் ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகத் பிராங்கிளின் இறந்தார் ஜெசிபி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விடுதியின் அறையை போலீஸார் சோதனை செய்தபோது விஷ பாட்டிலை கைப்பற்றினர் இதனால் 4 பேரும் விஷம் குடித்ததால் மயங்கியதாக போலீஸார் கருதினர் ஜெகத் பிராங்கிளின் இறந்துவிட்டதால் மற்ற மூன்று பேரிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின இதுகுறித்து போலீஸார் கூறுகையில் “தற்கொலை செய்து கொண்ட ஜெகத் பிராங்கிளின் தந்த்ரா மாஸ்டர் என விசிட்டிங் கார்டு அச்சடித்து வைத்துள்ளார் தந்த்ரா என்றால் செக்ஸ் தொடர்பான கலை என்று அர்த்தம் பிராங்கிளினுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது இந்தச் சமயத்தில்தான் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சரண்யா என்பவருடன் பிராங்கிளினுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது சரண்யாவுக்கு திருமணமாகிவிட்டது கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சரண்யா வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார் இதுதொடர்பாக கருங்கல் காவல் நிலையத்தில் சரண்யாவின் கணவர் புகார் கொடுத்துள்ளார் அதன்பிறகு சரண்யாவை போலீஸார் மீட்டுள்ளனர் இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் குடும்பத்துடன் ஜெகத் பிராங்கிளின் சென்னை வந்துள்ளார் அவர்களுடன் சரண்யாவும் வந்துள்ளார் கடந்த 7-ம் தேதி மாலை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் அனைவரும் ஒரே அறையில் தங்கினர் அதன்பிறகு சென்னையில் பல இடங்களில் பிராங்கிளின் வேலை தேடியுள்ளார் ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை இதனால்தான் இனிமேல் நம்மால் இந்த உலகத்தில் வாழ முடியாது என ஜெகத் பிராங்கிளின் கருதியுள்ளார் தற்கொலை செய்து கொள்ள அவர் முடிவெடுத்ததும் அவரின் மனைவி சரண்யா ஆகியோரும் தற்கொலை செய்து கொள்ள சம்மதித்துள்ளனர் அதன்பிறகு நான்கு பேரும் விஷம் குடித்துள்ளனர் ஜெகத் பிராங்கிளின் இறந்துவிட்டார் மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்தத் தகவல் தெரியவந்தது தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம் ஜெகத் பிராங்கிளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றனர் இந்தச் சூழ்நிலையில் ஜெகத் பிராங்கிளின் தந்த்ரா மாஸ்டர் அண்ட் மாஸ்டர் ஆப் ஆல் ஆர்ட்ஸ் என விசிட்டிங் கார்டில் அச்சடித்துள்ளார் இதனால் அவர் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர் மேலும் ஜெகத் பிராங்கிளின் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அந்தப் பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவரைச் சந்தித்துள்ளார் அதன்பிறகுதான் இந்த முடிவை ஜெகத் பிராங்கிளின் எடுத்துள்ளார் அந்த அரசியல் பிரமுகர் யார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர் மேலும் ஜெகத் பிராங்கிளின் மற்றும் அவருடன் விஷம் குடித்தவர்களின் செல்போன் அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர் அதன் அடிப்படையிலும் விசாரணை நடந்துவருகிறது ஜெகத் பிராங்கிளினுக்கும் சரண்யாவுக்கும் உள்ள நட்பு குறித்து புனிதா ராணியிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர் அதுபோல சரண்யாவிடமும் விசாரித்தால் இந்தச் சம்பவத்தில் கூடுதல் தகவல் கிடைக்கும் என போலீஸார் நம்புகின்றனர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூன்று பேரின் உடல் நிலைமையை 24 மணி நேரத்துக்குப் பிறகுதான் உறுதியாகச் சொல்ல முடியும் என டாக்டர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர் அதன்பிறகுதான் அவர்களிடம் முழுமையாக விசாரிக்க உள்ளதாக போலீஸார் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார் தந்த்ரா மாஸ்டர் ஜெகத் பிராங்கிளினின் விசிட்டிங் கார்டில் எப்போதும் சந்தோஷமாக வாழுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் மற்றவர்களை சந்தோஷமாக வாழ வழிகாட்டிய ஜெகத் பிராங்கிளின் ஏன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்விக்கான விடையைத் தேடி வருகின்றனர் போலீஸார்  4 பேர் தற்கொலைக்கு முயன்று அதில் ஒருவர் இறந்த சம்பவம் திருவல்லிக்கேணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

Leave A Reply

Your email address will not be published.