`ஒருவாரத்தில் விருதுநகர் அ.ம.மு.க முகாம் கூண்டோடு காலி!’ – அ.தி.மு.க-வில் இணைந்த இன்பத்தமிழன்

0 7

`இன்னும் ஒரு வாரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அ.ம.மு.க கட்சியினர் அனைவரும் அ.தி.மு.க-வில் இணைவர். அ.ம.மு.க கூண்டோடு காலியாகிவிடும்’ என அ.தி.மு.க-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் தற்போது முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அனைத்து இடங்களிலும் 3 அல்லது 4-வது இடத்துக்குச் சென்றது. இதனால், அ.ம.மு.க-வினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், அ.ம.மு.க-வினர் பலரும் அ.தி.மு.க-வில் இணைந்து வருகின்றனர்.இந்நிலையில், விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க செயலாளராக இருந்த இன்பத்தமிழன், தமிழக முதல்வரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அ.தி.மு.க-வில் இணைந்தார். கடந்த 2001-ம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தன் தந்தை தாமரைக்கனியை எதிர்த்து போட்டியிட்டு இன்பத் தமிழன் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் வெற்றிபெற்ற இன்பத்தமிழன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அ.ம.மு.க-வில் விருதுநகர் மாவட்டச் செயலராக இருந்த அவர், அ.தி.மு.க-வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இதுதொடர்பாக இன்பத்தமிழனிடம் பேசினோம்.“தாய்க் கழகத்தில் இணைந்துள்ளேன். அ.ம.மு.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்ததற்கு வேறு ஏதும் காரணமில்லை. இன்னும் ஒருவாரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அ.ம.மு.க கூண்டோடு காலியாகிவிடும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.