`சொத்துக்காக என் மகனுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திட்டாங்க!’-தி.மலை கலெக்டரிடம் தந்தை கண்ணீர்

0 7

தங்கள் சொத்தை அபகரிப்பதற்காக மாற்றுத்திறனாளிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பஸ் டிரைவர் ஹெச்ஐவி ரத்தம் ஏற்றியதாக புகார் கூறப்பட்டுள்ளதுதிருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடி அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரின் மகன் வெங்கடேசபெருமாள் 19 வயதான இவர் வாய் பேச முடியாத மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத்திறனாளி இவருக்கு ஹெச்ஐவிரத்த ஊசியை அதே பகுதியைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர் செல்வகுமார் என்பவர் போட்டுவிட்டார் என மாவட்ட கலெக்டரிடம் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார் தந்தைஇதுகுறித்து மாற்றுத்திறனாளியின் தந்தை ஏழுமலையிடம் பேசினோம் “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாங்கள் வீட்டில் இல்லாதபோது என் மகனுக்கு டிரைவர் செல்வகுமார் ஊசி போட்டுள்ளார் அதை என் மகன் ஜாடை மாடையாக என்னிடம் சொன்னான் நான் செல்வகுமாரிடம் கேட்டதற்கு `அவனுக்கு ஜுரம் இருந்துச்சு அதான் போட்டேன் மாமா39 என்று சொன்னான் அவன்தான் எங்க ஊரில் யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் ஊசி போடுவான் அதனால் அமைதியாக இருந்துவிட்டேன் கொஞ்ச நாள்கள் கழித்து ஊசி போட்ட இடத்தில் கட்டியாக மாறியதால் வலிதாங்க முடியாமல் என் மகன் அவஸ்தைபட்டான் நாங்கள் உடனே வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தோம் டாக்டர்கள் கட்டியை அகற்ற வேண்டும் என்றால் முதலில் அவருக்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்லி ரத்தப் பரிசோதனை செய்தார்கள்ரத்தப் பரிசோதனை செய்த டாக்டர்கள் “என் புள்ளைக்கு ஹெச்ஐவி இருக்குனு சொன்னாங்க அதைக் கேட்கும்போது என் கொலையே நடுங்கிப் போச்சு எப்படி டாக்டர் சார் என் புள்ளைக்கு இந்த நோய் வந்துச்சுனு கேட்டேன் `அப்பா அம்மாவுக்கு இருந்துச்சுனா புள்ளைக்கும் வரும் அப்படி இல்லையென்றால் சிலர் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மூலம் வரும் அதுவும் இல்லை என்றால் ஹெச்ஐவி ரத்தத்தை ஊசி மூலம் யாராவது உங்க மகனுக்கு போட்டிருக்க வேண்டும்39 என்று சொன்னார் உடனே எனக்கும் என் மனைவிக்கும் ரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னேன் பரிசோதனை செய்த டாக்டர்கள் உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் அதன் பிறகுதான் எனக்கு நினைவு வந்தது உடனே செல்வகுமாரிடம் கேட்டேன் என் மகனுக்கு என்ன ஊசி போட்ட ஹெச்ஐவி இருக்குனு டாக்டர் சொல்றாங்கனு கேட்டேன் உடனே அவன் ஜுரம் ஊசிதான் போட்டேன் என்று மழுப்பினான் பிறகுதான் எனக்கு சந்தேகம் வழுத்தது என் சொத்துக்காகத்தான் இப்படியெல்லாம் செய்துள்ளான் என்று எனக்கு 25 ஏக்கர் நிலம் உள்ளது அதை என் ஒரே மகனுக்காக வைத்துள்ளேன் அந்த நிலத்தை சுலோசனா என்பவர் கேட்டார் நான் கொடுக்கவில்லை டிரைவர் செல்வக்குமாரும் கேட்டார் கொடுக்கவில்லை அதனால்தான் இப்படி செய்துள்ளார் மூளை வளர்ச்சி இல்லாத வாய் பேச முடியாத என் மகனைக் கொலை செய்துவிட்டால் சொத்தை வாங்கிவிடலாம் என்று இப்படி ஹெச்ஐவி ஊசியைப் போட்டுள்ளார் என்று சந்தேகமாக உள்ளது” என்றார் மேலும் அவர்  “இதனை விசாரணை செய்ய வேண்டும் என்றுதான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன் எந்த நடவடிக்கையும் இல்லை அதனால்தான் இப்போது வந்துள்ளேன்” என்றார்கலெக்டர் ஜமாபந்திக்குச் சென்றுவிட்டதால் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்குச் சென்று கேட்டனர் அப்போது இது தொடர்பாக கலெக்டரின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர் இதுகுறித்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் கூறுகையில் `மாற்றுத்திறனாளியான இளைஞருக்கு ஹெச்ஐவி பாதிப்பு உள்ளது இது எப்படி அவருக்குப் பரவியது என்பது தெரியவில்லை அவரின் பெற்றோர் கூறுவது போன்று ஊசி மூலம் ரத்தம் ஏற்றியதால் பரவியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது மேலும் பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார் 

Leave A Reply

Your email address will not be published.