“அவர் முகத்தைக்கூடச் சரியா பார்க்கலயே!” – ஸ்டாலினுக்காக உருகிய கோவை மக்கள்

0 21

“கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்திருந்த முகஸ்டாலின் சூலூர் நன்றி அறிவிப்புக் கூட்டத்தின் முதல் ஸ்பாட்டான கலங்கல் பகுதியில் பெரிதாக எதுவும் பேசாமல் உடனடியாக கிளம்பியதால்  ‘அவர் முகத்தைக்கூடச் சரியா பார்க்க முடியலையே’  என்று அப்பகுதி பொதுமக்கள் உருகினார்கள்நேற்று விமானம் மூலம் கோவை வந்த திமுக தலைவர் ஸ்டாலின்  சூலூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி அறிவிப்பு பயணத்தை ஆரம்பித்தார்  கலங்கல் கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனிக்குதான் முதலில் சென்றார் ஸ்டாலின் குறிப்பிட்ட இடத்தை நெருங்கியபோது  `நாங்களெல்லாம் திமுகவுக்குத்தான் ஓட்டு போட்டோம் திமுக தோத்திருக்கக் கூடாது’ என்று சிலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள் ஸ்டாலின் வந்ததும் அங்குள்ள மதுரை வீரன் பட்டத்தரசியம்மன் கோயிலுக்கு வந்தார் அவருக்குப் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்அதன்பிறகு கோயில் முன்பாக அமர்ந்தவாறு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கும் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் அப்போது கூட்டத்திலிருந்த பலர் முகஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்தனர் அவர்களில் சிலரை அழைத்து செல்ஃபி எடுத்துக்கொண்டார் உடனடியாக அங்கிருந்து கிளம்பிய ஸ்டாலின் அடுத்து கலங்கல் பகுதியிலேயே ஒரு ஆலமரத்தின் அருகில் கூடியிருந்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார் தொடர்ந்து பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளித்தனர் மனுக்களை வாங்கிய கையோடு அங்கிருந்து அடுத்த ஸ்பாட்டுக்கு நகர்ந்தார்  இதனால் வருத்தமடைந்த அப்பகுதி மக்களில் பலர் `ஓட்டு கேட்க வரும்போது மணிக்கணக்கா எங்ககூட உட்கார்ந்து பேசினார் அதேபோல இப்போதும் பேசுவார்னு நினைச்சோம் ஆனால் இப்படி அவர் உடனே கிளம்பி போவார்னு நாங்க எதிர்பார்க்கலை அவர் முகதைக்கூட சரியா பாக்க முடியலையே’ என்று புலம்பியவர்கள் `திரும்பவும் வருவாரா திரும்பவும் வருவாரா39 என்று ஒருவரை ஒருவர் தங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தது திமுகவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது 

Leave A Reply

Your email address will not be published.