ஓ.எஸ்.மணியன் புறக்கணித்தது ஏன்?- இரண்டு காரணங்கள்!

0 7

`ஒற்றைத் தலைமை வேண்டும்39 என்று அதிமுகவில் போர்க்கொடி எழுந்துள்ள நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது இதில் கலந்துகொள்ளாமல் நாகை மாவட்டச் செயலாளரும் கைத்தறித் துறை அமைச்சருமான ஓஎஸ்மணியன் புறக்கணித்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறதுநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து மதுரை மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா “அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை கூடாது ஒற்றைத்  தலைமையே வலிமை தறும் என்று தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தார் அதற்கு எம்எல்ஏ-க்கள் குன்னம் ராமச்சந்திரன் மற்றும் கலைராஜன் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் இக்கருத்து முதல்வர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தப் பிரச்னை உட்பட அதிமுகவில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண இன்று சென்னையில் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது தனது சகோதரர் மகன் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருப்பதால் அமைச்சர் சிவி சண்முகம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லைஆனால் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டு கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் வழங்க மறுக்கப்பட்டு அதன்பின் மன்னார்குடி திவாகரன் மூலமாக சசிகலா சிபாரிசில் சீட் பெற்று எம்எல்ஏவாகி அமைச்சரானவர் ஓஎஸ்மணியன் இன்றும் திவாகரனுடன் நெருக்கத்தில் இருப்பதாகவும் சசிகலா விடுதலையாகி அதிமுகவுக்கு தலைமை ஏற்பதற்கு மணியன் ஆதரவு தெரிவிப்பதாகவும் செய்தி பரவி வருகிறது இந்நிலையில் இன்று ஓஎஸ்மணியன் மாவட்டச் செயலாளர் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது வதந்திகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது தனது சொந்த ஊரான தலைஞாயிறுவில் ஓஎஸ்மணியன் புதிதாகத் தொடங்கியிருக்கும் `சிவசக்தி இன்டர்நேஷனல் பள்ளியின்39 முதல் நாள் மாணவர் சேர்க்கை இன்று நடைபெறுகிறது இப்பள்ளி அவரது 25 ஆண்டுக்கால கனவு என்றும் பள்ளி தொடங்கும் முதல் நாளில் அவர் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதான் சென்னைக் கூட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டதுஓஎஸ்மணியனின் நெருங்கிய வட்டாரத்தில் கேட்டபோது உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் அமைச்சர் சென்னைக் கூட்டத்திற்குப் போகவில்லை இதுகுறித்து முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் நேரில் தெரிவித்த பின்பே ஊருக்கு வந்தார் அமைச்சருக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே தவறான தகவலைப் பரப்புகின்றனர் அது உண்மையல்ல  என்றனர் 

Leave A Reply

Your email address will not be published.