`சைக்கோ கில்லர்’ முனுசாமி! – காட்டிக் கொடுத்த மீன் கடை முதலாளி

0 5

சென்னை மாதவரத்தில் இரண்டு பேரின் மர்ம உறுப்புகளை அறுத்த சைக்கோ கில்லர் முனுசாமி சிக்கியது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது  இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர் “சென்னை ரெட்டேரி பாலத்தின் கீழே மே 25-ம் தேதி அஸ்லாம் பாஷாவும் ஜூன் 2-ம் தேதி நாராயண பெருமாளும் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர் இதில் அஸ்லாம் பாஷா இறந்துவிட்டார் நாராயண பெருமாள் சிகிச்சை பெற்றுவருகிறார் இருவரிடமும் முதலில் சம்பவம் எப்படி நடந்தது என்று விசாரித்தபோது அவர்கள் உண்மையைச் சொல்லவில்லை இதனால்தான் சைக்கோ கில்லரைக் கண்டறிவதில் காலதாமதம் ஏற்பட்டது ரெட்டேரி பாலத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம் அப்போதுதான் சைக்கோ கில்லர் யார் என்று அடையாளம் காணமுடிந்தது அவரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு 16 நாள்களாக பல இடங்களில் தேடினோம் இந்தச்சமயத்தில்தான் சிசிடிவி கேமராவில் பதிவான சைக்கோ கில்லரின் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டோம் அப்போது ரெட்டேரியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் தனிப்படை போலீஸாருக்கு ஒரு தகவல் தெரிவித்தார் அவர் நீங்கள் தேடும் நபர் என்னுடைய கடையில்தான் வேலை பார்த்தார் தற்போது அவர் வேலைக்கு வரவில்லை என்று கூறினார் இதையடுத்து அசோக்குமாரிடம் சைக்கோ கில்லர் குறித்த விவரங்களைச் சேகரித்தோம் சைக்கோ கில்லரின் பெயர் முனுசாமி என்றும் சொந்த ஊர் மானாமதுரை என்றும் தெரிந்தது முனுசாமியைக் கைது செய்து விசாரித்தபோது சில தகவல்களை அவர் கூறினார்  `ரெட்டேரி பாலத்தின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்துவேன் அப்போது அங்கு மதுஅருந்த வருபவர்களிடம் நைசாகப் பேச்சுக் கொடுப்பேன் அப்போது தன்பாலினச் சேர்க்கைக்கு சம்மதிப்பவர்களை மறைவான இடத்துக்கு அழைத்துச் செல்வேன் அங்கு நாங்கள் சந்தோஷமாக இருப்போம் மே 25-ம் தேதி இரவு 930 மணியளவில் அஸ்லாம் பாஷாவைச் சந்தித்தேன் அவரும் நானும் தன்பாலினச் சேர்க்கைக்காக பாலத்தின் கீழ் சென்றோம் அப்போது அவர் சரிவர ஒத்துழைக்கவில்லை இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது ஆத்திரமடைந்த நான் பிளேடால் அவரின் மர்ம உறுப்பை அறுத்தேன் பிறகு அவரின் தலையிலும் தாக்கிவிட்டு தப்பிவிட்டேன் அஸ்லாம் பாஷாவிடம் போலீஸார் விசாரித்தபோது என்னைப் பற்றி அவர் எந்தத் தகவலையும் சொல்லவில்லை இதனால் தைரியமாக வெளியில் சுற்றித்திரிந்தேன் இந்தச்சமயத்தில்தான் ரெட்டேரி மேம்பாலத்தின் அருகில் நாராயண பெருமாளைச் சந்தித்தேன் அவரையும் தன்பாலினச் சேர்க்கைக்காக அழைத்துச் சென்றேன் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது இதனால் ஆத்திரமடைந்த நான் நாராயண பெருமாளின் மர்ம உறுப்பை பாட்டிலால் அறுத்தேன் பிறகு அவரையும் தாக்கிவிட்டு தப்பிவிட்டேன் அஸ்லாம் பாஷாவைப் போல நாராயண பெருமாளும் என்னைப் பற்றி போலீஸாரிடம் எந்தத் தகவலையும் சொல்லவில்லை இருப்பினும் எனக்குள் பயம் வந்துவிட்டது இதனால் சென்னையிலிருந்து ஊருக்குச் சென்றுவிட்டேன் ஆனால் சிசிடிவி கேமரா பதிவால் சிக்கிக்கொண்டேன்39 என்று முனுசாமி கூறினார்  இந்தத் தகவலின் அடிப்படையில்தான் முனுசாமியைக் கைது செய்துள்ளோம் அவரின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம் முனுசாமியால் வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என்றும் விசாரணை நடந்துவருகிறது என்றார் இதற்கிடையில் முனுசாமி கைது குறித்து கூடுதல் காவல் ஆணையர் தினகரன் அளித்த பேட்டியில் “இரண்டு பேரின் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே நபர் என்பதை விசாரணை மூலம் உறுதி செய்தோம் இந்தச் சம்பவம் தொடர்பாக 40 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம் மாதவரம் மாதவரம் ரவுண்டானா ரெட்டேரி சந்திப்பு ராஜமங்களம் வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் முனுசாமியின் உருவம் பதிவாகியிருந்தது ஆனால் அவர் குறித்த விவரங்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை இதனால்தான் முனுசாமியின் புகைப்படத்தை மீடியாக்களில் வெளியிட்டோம்அசோக்குமார் கொடுத்த தகவலின் பேரில் முனுசாமியைக் கைது செய்துவிட்டோம் பாதிக்கப்பட்ட இரண்டு பேரும் தனக்கு முழு ஒத்துழைப்பு தராத விரக்தியில் மர்ம உறுப்புகளை அறுத்தாக முனுசாமி எங்களிடம் தெரிவித்தார் பாதிக்கப்பட்ட இரண்டு பேரும் போலீஸாரிடம் தாங்கள் தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபட்ட தகவல் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக்கருதி உண்மையை மறைத்துவிட்டனர் இதனால்தான் முனுசாமியைப் பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது இருப்பினும் காவல் துறை சிசிடிவிகேமரா பொதுமக்கள் மீடியாக்கள் ஆகியோரின் உதவியால் முனுசாமியைப் பிடித்துள்ளோம் பொதுமக்கள் ஒத்துழைத்தால் குற்றங்களைத் தடுக்கவும் கண்டுபிடிக்கவும் முடியும் என்றார் முனுசாமியைக் கைது செய்ய இரவு பகல் பாராமல் உழைத்த துணை கமிஷனர் ரவளி பிரியா கந்த புனேனி மாதவரம் உதவி கமிஷனர் ராமலிங்கம் இன்ஸ்பெக்டர் பீட்டர் ஜவஹர் பப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டலின் ரமேஷ் சதீஷ் மற்றும் காவலர்களை கூடுதல் கமிஷனர் தினகரன் பாராட்டினார் அதோடு தகவல் தெரிவித்த அசோக்குமாரையும் தனிப்படை போலீஸார் பாராட்டினர் யார் இந்த அசோக்குமார் என்று போலீஸாரிடம் கேட்டதற்கு அசோக்குமார் மீன் கடை வைத்துள்ளார் அவரின் கடையில்தான் முனுசாமி வேலை பார்த்துவந்துள்ளார் தன்பாலினச் சேர்க்கை பழக்கத்துக்கு முனுசாமி அடிமையானவர் என்ற தகவல் அசோக்குமாருக்கு தெரியாது சில நாள்கள் முனுசாமி வேலைக்கு வரவில்லை இதனால் அவர் சொந்த ஊருக்குச் சென்றிருப்பார் என அசோக்குமார் கருதியுள்ளார் செய்தி வெளியான பிறகுதான் முனுசாமியின் சுயரூபம் அசோக்குமாருக்கு தெரிந்ததுஎன்று கூறினர் சைக்கோ கில்லர் முனுசாமி குறித்து அசோக்குமார் போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளார் வழக்கமாக போலீஸுக்குத் தகவல் தெரிவிப்பவர்களின் அடையாளத்தை போலீஸார் மறைத்துவிடுவார்கள் ஆனால் கூடுதல் கமிஷனர் தினகரன் தகவல் தெரிவித்த அசோக்குமாரின் விவரங்களை தெரிவித்தார் இதனால்தான் இன்பார்மர் அசோக்குமார் குறித்த தகவல்கள் வெளியாகிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர் 

Leave A Reply

Your email address will not be published.