`சிசிடிவி கேமராவா, `டோன்ட்வொரி ஜி!’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்களின் வாக்குமூலம் 

0 8

சென்னை திநகரில் உள்ள பிரபலமான இரண்டு ஜவுளிக் கடைகளில் விலை உயர்ந்த பட்டுச் சேலைகளைத் திருடிய வழக்கில் 4 டெல்லி பெண்கள் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் அவர்கள் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் `சிசிடிவி கேமராவா டோன்ட்வொரி ஜி 39 என்று கூலாக கூறியுள்ளனர்  சென்னை திநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரபலமான ஜவுளிக் கடைக்குள் 4 வடமாநில பெண்கள் 2 ஆண்கள் கடந்த 11-ம் தேதி இரவு சென்றனர் பட்டுப்புடவை பிரிவில் நீண்ட நேரமாக சேலைகளை அவர்கள் பார்த்தனர் அதன்பிறகு அவர்கள் வெளியில் சென்றனர் எந்தப் பொருள்களும் வாங்காததால் கடை ஊழியர்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது இதையடுத்து அவர்களிடம் விசாரித்தனர் அப்போது அவர்கள் இந்தியில் தங்களுக்குள் பேசிக்கொண்டனர் கடை ஊழியர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் சரியாகப் பதில் சொல்லாமல் கடையிலிருந்து வெளியே செல்ல முயற்சி செய்தனர் இதனால் 4 பெண்களையும் 2 ஆண்களையும் கடை ஊழியர்கள் அறைக்குள் அழைத்துச் சென்று சோதனை நடத்தினர் அப்போது சுடிதாருக்குள் விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன அதைப்பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர் இதையடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு கடை ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் 4 பெண்களிடமும் 2 ஆண்களிடமும் விசாரணை நடத்தினர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின  இதுகுறித்து போலீஸார் கூறுகையில் “ஜவுளிக்கடையில் பட்டுப்புடவைகளைத் திருடியவர்கள் டெல்லியைச் சேர்ந்த ராம்குமார் (40) ரிங்குசிங் (35) பீனா (53) ஜோதி (48) சுனிதா (26) தீபாஞ்சலி (21) எனத் தெரியவந்தது இவர்கள் டெல்லியிலிருந்து கார் மூலம் சென்னை வந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள கடையில் திருடுவதற்கு முன் அதேபகுதியில் உள்ள இன்னொரு பட்டு ஷோரூமில் கைவரிசை காட்டியுள்ளனர் அங்கு 222369 ரூபாய் மதிப்புள்ள 3 பட்டுச் சேலைகளைத் திருடியுள்ளனர் அந்தச் சேலைகளை காரில் வைத்துவிட்டுதான் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஜவுளிக் கடைக்கு வந்துள்ளனர் அங்கு 141010 ரூபாய் மதிப்புள்ள 3 பட்டுச் சேலைகளைத் திருடியுள்ளனர் இந்தக் கும்பலிடமிருந்து 6 பட்டுச் சேலைகளை மீட்டுள்ளோம் மேலும் பட்டுச் சேலைகளைத் திருடிய 6 பேரை கைது செய்து திருட்டு சம்பவத்துக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளோம்3939 என்றனர் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் “டெல்லி சுலைமான் நகரைச் சேர்ந்த ராம்குமார் தலைமையில்தான் இந்தத் திருட்டுக் கும்பல் செயல்பட்டுவந்துள்ளது ரங்குசிங் பீனா ஜோதி சுனிதா தீபாஞ்சலி ஆகிய 5 பேரும் டெல்லி மங்கள்புரியைச் சேர்ந்தவர்கள் மேலும் உறவினர்கள் 26 வயதாகும் சுனிதாவின் கணவர் இறந்துவிட்டார் அதுபோல 21 வயதாகும் தீபாஞ்சலியின் அப்பாவும் இறந்துவிட்டார் இதனால்தான் இவர்கள் இருவரும் திருட்டுத் தொழிலுக்கு சிறுவயதிலேயே வந்துவிட்டதாக எங்களிடம் தெரிவித்தனர் இவர்களின் பின்னணி குறித்து டெல்லி போலீஸாரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளோம் கார் மூலம் சென்னை வந்து கைவரிசை காட்டுவதையே வேலையாக வைத்துள்ளனர் மேலும் விலை உயர்ந்த பட்டுச் சேலைகளைத் திருடுவதே இவர்களின் டார்க்கெட் ஜவுளிக் கடைக்குள் நுழையும் இந்தக் கும்பலில் 4 பெண்களும் ஓர் ஆணும் மட்டுமே கைவரிசை காட்டுவார்கள் கார் பார்க்கிங்கில் ராம்குமார் அல்லது ரங்குசிங் டிரைவர் சீட்டில் தயாராக இருப்பார் பெண்கள் டிப்-டாப்பாகவும் ராயலாகவும் உடையணிந்து செல்வார்கள் இதனால் கடை ஊழியர்களுக்கு எளிதில் சந்தேகம் ஏற்படாது கடை ஊழியர்களை ஏமாற்றிவிட்டு பட்டுச் சேலைகளை சுடிதாருக்குள் மறைத்து வைத்துக்கொள்வார்கள் பிறகு சர்வசாதாரணமாக வெளியில் வந்துவிடுவார்கள் விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை குறைந்த விலைக்கு டெல்லியில் விற்றுவிடுவார்கள் அந்தப் பணத்தை 6 பேரும் பங்கிட்டுக் கொள்வார்கள் இந்தக் கும்பல் இதற்கு முன் சென்னையில் கைவரிசை காட்டியுள்ளார்களா என்று விசாரித்துவருகிறோம் சம்பவத்தன்றுகூட ஒரு கடையில் மூன்று பட்டுச் சேலைகளைத் திருடியபோது இந்தக்கும்பல் தப்பிவிட்டது அடுத்த கடையில் திருடிவிட்டு தப்பிச் செல்லும்போதுதான் சிக்கியுள்ளது இந்தக் கும்பல் எப்படி திருடினார்கள் என்பதை கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம் அப்போது 4 பெண்களும் கடைக்குள் பேசிக்கொண்டு பட்டுச் சேலைகளை தேர்வு செய்கின்றனர் விலையுயர்ந்த ஒரு பட்டுச்சேலையை ஒரு பெண் எடுத்து இன்னொருவரிடம் கொடுக்கிறார் அவரும் அதை ஆர்வமாக பார்ப்பதுபோல சுடிதாருக்குள் வயிற்றுப்பகுதியில் மறைத்து வைத்துக்கொள்கிறார் இந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்த கடை ஊழியர்கள் இப்படியெல்லாம் திருடுவார்களா என அதிர்ச்சியடைந்தனர் தற்போது இரண்டு கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளோம் என்றார்  பட்டுச் சேலைகளைத் திருடிய டெல்லி பெண்கள் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் `சில்க்ஸ் சாரீஸைத் திருடினால் அமவுன்ட் கிடைக்கும் டெல்லியிலிருந்து குரூப்பா வருவோம் ஒன் டைம் வந்தா 50 சில்க்ஸ் சாரீஸை திருடுவோம் இது எங்களுக்கு ஒரு சம்மர் ட்ரிப்39 என்று கூறியுள்ளனர் பெரிய கடைகளில் சிசிடிவி கேமரா இருக்குமே என்று 4 பெண்களிடம் விசாரணை அதிகாரி கேட்டதற்கு  `சிசிடிவி கேமராவா டோன்ட்வொரி ஜி39 என்று கூலாகக் கூறியுள்ளனர்சென்னை திநகரில் உள்ள பிரபலமான இரண்டு கடைகளில் டெல்லியைச் சேர்ந்த 4 பெண்களும் 2 ஆண்களும் கண்காணிப்பு கேமராவை மீறி கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

Leave A Reply

Your email address will not be published.