ராகுலின் வயநாடு விசிட்… என்ன ஸ்பெஷல்?

0 7

அவர் பெயர் ராஜம்மா வயது எப்படியும் 70-க்கு மேல் இருக்கும் கல்பெட்டா அரசுப்பங்களா முகப்பில் நிதானமின்றி நின்றிருக்கிறார் அவர் கூடவே அவருடைய பேத்தி கெளரி பேரன் கோகுல் கெளரிக்கு 10 வயது கோகுலுக்கு 15 வயது இரண்டு பிள்ளைகளும் பாட்டி ராஜம்மாவின் தோளைத் தொட்டபடி நிற்கின்றனர் அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் ராஜம்மாவை அணுகுகிறார்கள் ‘நீங்கள்’ என இழுக்கிறார்கள் ராஜம்மா சன்னமான குரலில் ‘நான் அவனுக்காகக் காத்திருக்கிறேன் டெல்லி மருத்துவமனையில் என் கரங்களில்தான் அவன் தவழ்ந்தான்’ என்கிறார் ராஜம்மா சொன்ன ‘அவன்’ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி39வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்புக்காக ராகுல் வயநாடு வருகிறார்39 என்று அறிந்ததும் அவரைப் பார்க்க வேண்டுமென்று அடம்பிடித்திருக்கிறார் ராஜம்மா உள்ளூர் காங்கிரஸ் தலைவர் அஸானிர் வீட்டுக்கு நடையாய் நடந்து விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் அஸானிர் ‘நான் எப்படியாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறேன் நீங்கள் கவலையை விடுங்கள்’ என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார் சொல்லியபடியே ராகுல் – ராஜம்மா சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டார் அஸானிர் அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது அதாவது அஸானிரும் இதுவரை ராகுலை நேரில் பார்த்ததில்லை தொட்டு உரையாடியதில்லை அதனால் ’ராஜம்மாவை சாக்காக வைத்து ராகுலை நாமும் பார்த்துவிடலாம்’ என்று எண்ணியிருக்கிறார் அஸானிர்ராஜம்மாவை அறிமுகப்படுத்தவில்லை அல்லவா அவர் ஒரு செவிலித்தாய் டெல்லி ’ஹோலி ஃபேமிலி’ மருத்துவமனையில் ராகுல் பிறந்தபோது உடன் இருந்தவர் ராகுலை முதன்முதலில் கைகளில் ஏந்தி மகிழ்ந்தவர் அதற்குப் பிறகு ராகுலை அவர் காணவில்லை தற்போது ஒரு தருணம் அமைந்ததும் ’எப்படியாவது ராகுலைப் பார்த்தாக வேண்டும்’ என்று ஆசை கொண்டிருக்கிறார்ஜூன் 8-ம் தேதி மாலை ராகுல் கல்பெட்டா அரசுப்பங்களாவுக்கு வருகிறார் வந்ததுமே ராஜம்மாவைத்தான் தேடுகிறார் காண்கிறார் மெல்லிய புன்னகையுடன் அவரை நோக்கி வருகிறார் ராஜம்மா அப்போதே கலங்க ஆரம்பித்துவிட்டார் அவரால் நிற்க முடியவில்லை ராகுல் ராஜம்மாவை நெருங்கி கட்டியணைக்கிறார் ’நமஸ்தே’ சொல்கிறார் ‘நலமா’ என்கிறார் ராஜம்மாவால் அப்போதும் எதுவும் பேசமுடியவில்லை கொண்டுவந்திருந்த சில தின்பண்டங்களை மட்டும் எடுத்து நீட்டுகிறார் ராகுல் அதைப் பெற்றுக்கொண்டு விடைபெறுகிறார் மறக்காமல் தயங்கி நின்றிருந்த அஸானிரிடமும் கைகுலுக்கிப் போகிறார் அவ்வளவுதான் ஒரே நாளில் இந்தியா முழுவதும் அறியப்பட்டவராகிறார் ராஜம்மா அஸானிருக்கும் உள்ளூர் ஊடகங்களில் நல்ல கவனிப்பு அரசியலில் அரிதாக சில அத்திப்பூக்கள் தென்படும் அப்படிப்பட்ட அத்திப்பூ ராகுல் – ராஜம்மா சந்திப்பு சரி ராகுலைச் சந்தித்தபோது ராஜம்மாவின் மனநிலை எப்படியிருந்தது அவரே சொல்கிறார் ’அவன் என்னை நோக்கி வந்தான் கட்டியணைத்தான் என் மகனைப்போலவே நடந்துகொண்டான்’ சொல்லி முடித்ததும் சிறிதாய் சிரிக்கிறார் ’பதற்றத்தில் அவனை வீட்டுக்கு அழைக்க மறந்துவிட்டேன் அடுத்தமுறை கண்டிப்பாக அழைப்பேன்’ என்று சொல்லும்போது இன்னும் கூடுதல் சிரிப்பு அவரிடம் ராகுலுக்கு வயநாட்டில் போட்டியிடும் யோசனையை யார் சொன்னார்கள் எனத் தெரியவில்லை அவருக்கு ராகுல் கடன்பட்டிருக்கிறார்செய்தி எல்லோரையும் எட்டியிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்ததும் ராகுல் அதிகமாகவே மனமுடைந்தார் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் கோபப்படக்கூட தெம்பில்லாமல் இருந்திருக்கிறார் இது ஒன்றும் ஆச்சர்யமல்ல ராகுல் தோல்விக்கு பழகியவர்தான் ஆனால் 39தோல்விக்கு அஞ்சாத தன்மை கொண்டவர்39 என்று சொல்ல முடியாது ’எதையும் தாங்கும் இதயம்’ என்போமே அது அவருக்கு இல்லை தோல்வியில் எளிதில் மனம் உடையக்கூடியவர் அவர் அதை அவரது முகமே காட்டிவிடும் இதுதான் ராகுலின் ஆகப்பெரிய பலவீனம் ஆனால் சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு ராகுலால் மீண்டு வர முடியும் இதற்கு முன்னால் அவர் அப்படி மீண்டு வந்திருக்கிறார்  உத்தரப்பிரதேசம் குஜராத் சட்டமன்றத் தேர்தல் தோல்விகள் அவருக்கு மரண அடிகளாக அமைந்தன குஜராத்திலாவது 77 இடங்கள் ஆனால் உத்தரப்பிரதேச சட்டசபையில் வெறும் ஏழு தொகுதிகள் மட்டுமே ஆனாலும் எப்படியோ மனதை திரட்டிக்கொண்டு மீண்டெழுந்து வந்தார் அப்புறம் ராஜஸ்தான் மத்தியப்பிரதேசம் சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள் அவருக்கு நம்பிக்கை அளித்தன `ராகுலின் ராகுகாலம்’ முடிந்துவிட்டதென்றே எல்லோரும் நினைக்க ஆரம்பித்தனர் 39இந்தியா டுடே39 அவரை ‘செய்தி நாயகனாக’ அறிவித்து அட்டைப்படம் வெளியிட்டது ஆனால் ராகுலிடம் ராகு காட்டிய கரிசனத்தை சுக்கிரன் காட்டவில்லை இரண்டாம் முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது அவரது கட்சி எந்தச் சொற்களையும் மேலேபோட்டு மழுப்ப வேண்டியதில்லை எந்தத் தலைவனுக்கும் அது மிகப்பெரிய அடியேசும்மா சொல்லவில்லை தேர்தல் பிரசாரத்தில் ராகுல் போட்ட உழைப்பை சிவசேனாவே அங்கீகரித்தது ‘பயங்கரமாக உழைத்தீர்கள் ராகுல்’ என்று தலையங்கம் தீட்டியது சாம்னா அப்படிப்பட்ட அசுர உழைப்புக்குப் பலன் கிடைக்காததாலோ என்னவோ ராகுல் விரக்தியின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார் ’அவர் மீண்டுவருவார்’ என்று நம்பிக்கை வைக்க காங்கிரஸ் தலைவர்களாலேயே முடியவில்லைஆரம்பத்தில் ‘ராகுல் பதவிவிலகக் கூடாது’ என்று அழுத்திச் சொன்ன வீரப்ப மொய்லி பின்னால் ‘அப்படி விலகுவதாக இருந்தால் சரியான ஆளைக் கைகாட்டுங்கள்’ என்று சொல்லும் இடத்துக்கு வந்துசேர்ந்தார் ராகுலை சோனியாவைவிட நன்கறிந்த ஷீலா தீட்சித்தே ‘ராகுல் மீண்டுவருவாரா’ என்ற கேள்விக்கு சரியான பதில் சொல்ல முடியாமல் தத்தளித்தார் ஊடகங்கள் உடனே புரிந்துகொண்டன இத்தனை நாள்கள் ராகுலைக் கடந்து காங்கிரஸ் தலைவர் யாரென விவாதிக்காதவர்கள் அமரீந்தர் சிங் வேணுகோபால் சசிதரூர் எனப் பேச ஆரம்பித்தார்கள் ஆனால் ’வரக்கூடிய புதிய தலைமை ராகுல் அளவுக்கு நாடறிந்தவராக மக்களுக்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும்’ என்ற இடத்தில் எல்லோருமே பின் வாங்கினார்கள்ராஜீவ் காந்தி இறந்து நரசிம்மராவ் பிரதமரானபோது காங்கிரஸ் கட்சிக்கு இதேபோன்று ஒரு நிலை ஏற்பட்டது ஆனால் காங்கிரஸ் அப்போது ஆலமரமென விழுதுபரப்பி நின்றிருந்தது சமூகத்தின் அடிமட்டம்வரை அதன் வேர்கள் ஊடுருவியிருந்தன ஆனால் இப்போது நிலைமையே வேறாக இருக்கிறது இந்தியாவின் பல மாநிலங்கள் காங்கிரஸ் கையைவிட்டுப் போய்விட்டன இருக்கும் மாநிலங்களும் அவசர சிகிச்சைப்பிரிவிலேயே கிடக்கின்றன ‘எப்போது வேண்டுமானால் எதுவும் ஆகலாம்’ என்பதே நிலை இந்தச் சூழலில் ராகுலின் ராஜினாமா முடிவு இன்னும் காங்கிரஸை பலவீனப்படுத்துவதாகவே பார்க்கப்பட்டது அது உண்மையும்கூட ஒருவிதத்தில் இதுவரையிலான காங்கிரஸ் இயக்கத்தின் வரலாற்றில் இதுதான் மிக மோசமான காலம் தலையில் பனங்காய் அல்ல பலாப்பழத்தையே தாங்கி நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார் ராகுல்ராகுலின் ராஜினாமா முடிவுக்கு எவர் எவரோ என்னென்னமோ காரணங்கள் சொன்னார்கள் ஆனால் பிரியங்காதான் ‘எதிரிகளின் வலையில் வீழ்ந்தது போலாகிவிடும்’ என்று சரியான காரணத்தைக் கண்டறிந்து சொன்னார் ஆம் ‘காங்கிரஸை துடைத்தெறிவேன்’ என்று துண்டுதறி எழுந்து வந்தவர் அமித் ஷா அவரது கனவு ‘அகண்ட பாரதம்’ காங்கிரஸை முற்றழிக்காமல் அதை அவரால் அடையவே முடியாது அதனால்தான் ‘காங்கிரஸ் முக்த் பாரத்’ என்பதை கொள்கை முழக்கமாகவே முன்வைத்தார் அவர் சந்தேகமே இல்லை அவருடைய ஒவ்வோர் அடியும் ’காங்கிரஸ் இல்லாத இந்தியா’வை நோக்கியே வைக்கப்படுகிறதுராம் மாதவ்கூட சமீபத்தில் சொன்னார் ’2047-ம் ஆண்டுவரை இந்தியாவை பிஜேபி-தான் ஆளும்’ என்று இதற்கு என்ன அர்த்தம் அதுதானே ஆக அவர்களின் கனவு பெரிது அதற்கான திட்டங்களும் பெரிதாகவே இருக்க முடியும் அதற்குத் தடையாக இருக்கும் ஒரே அரசியல் ஆளுமையாக ராகுலை மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள் ஏனென்றால் ராகுல்தான் காங்கிரஸின் கடைசி நம்பிக்கை பிரியங்காவால் எவ்வளவு முடியும் என்பது நடந்து முடிந்த தேர்தலில் தெள்ளத் தெளிவாகிவிட்டது இனிமேல் அதைப் பேசி எந்தப் பயனும் இல்லை ஆகவே ராகுல்தான் காங்கிரஸைக் காத்துக்கொண்டிருக்கும் ஆக்ஸிஜன் மாஸ்க் Sure He is the last man standingஅவர் ராஜினாமா செய்துவிட்டார்தான் ஆனால் வரும் நாள்களில் கண்டிப்பாக வாபஸ் வாங்கிவிடுவார் என்றே தோன்றுகிறது காரணம் அந்த அளவுக்கு அபார நம்பிக்கையை ராகுலுக்கு ஊட்டி அனுப்பியிருக்கிறது வயநாடு திரும்பும் திசையெங்கும் ஒலித்த ‘மோனே ராகுல்’ எனும் பாசக்குரல் அதை அதிகமாகவே உறுதிப்படுத்துகிறது அதுவும் ராகுலின் இடுப்பின் மேல் ஏறி உட்கார்ந்து ‘ராகுல்காந்தி ஜிந்தாபாத்’ என்று ஒரு குழந்தை உதிர்த்த ஒரு சொல் ராகுலுக்கான மறுபிறப்புஇப்போது தெரிகிறது வயநாட்டில் ராகுலுக்கு கிடைத்த அசுரவெற்றி நிச்சயம் தற்செயல் அல்ல அது ஓர் அறிவிப்பு ராகுலுக்கான அறிவிப்பு இப்போதுகூட ‘வீ ஆர் வித் யூ ராகுல்’ என்று உறுதிமொழி அளித்தே அவரை வழியனுப்பி வைத்திருக்கிறார்கள் வயநாட்டு மக்கள் ஆம் அவர் மீண்டிருக்கிறார் அவர்கள் அவரை மீட்டிருக்கிறார்கள் ‘விஷத்துக்கு எதிராக நான் போரிட்டுக் கொண்டிருக்கிறேன் இந்திய மக்களை ஒன்றிணைப்பதே இனி என் வேலை’ என்று அங்கு வைத்து அவர் அறிவித்திருப்பது ஒரு பிரகடனம்’மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்’ என்று அறிவித்த பிறகு ராகுல் எங்கும் வெளியில் தலைகாட்டவில்லை இடையில் விவசாயி தினேசனுக்கு நியாயம் வேண்டி பினராயி விஜயனுக்கு ஒரு கடிதம் எழுதினார் அவ்வளவே அப்போதுதான் ராகுலின் வயநாடு பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டது மொத்தம் மூன்று நாள்கள் கிட்டத்தட்ட 15 மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் ’அறிவிப்பு வெளியானதுமே வயநாடு அதிர ஆரம்பித்துவிட்டது’ என்கிறார்கள் மலையாள ஊடக நண்பர்கள் ராகுல் வந்திறங்கியதும் இன்னும் அதிக உற்சாகமாம் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் மலப்புரம் கோழிக்கோடு கல்பெட்டா என எல்லாப் பகுதிகளிலும் ’ராகுல்  ராகுல்’ முழக்கம் வீட்டுக் கூரைகளிலும் கடைகளின் மாடங்களிலும் கடற்கரை நுரையென மக்கள் கொட்டிய மழையிலும் தூக்கிப்பிடித்த கைக்கொடியை இறக்கவில்லை அவர்கள் ஆக இனிமேலும் ஜன்பத் இல்லத் தோட்டத்தில் அமர்ந்துகொண்டு ஜனப்பிரியன் கனவுகாணும் ஓர் எளிய அரசியல்வாதியாக ராகுல் இருக்க முடியாது ஒரு தலைவனாக அதுவும் தலைவன்களை உருவாக்கும் தலைவனாக அவர் எழுந்து வரவேண்டிய அவசியத்தை ஏற்படுத்திவிட்டார்கள் வயநாட்டு மக்கள்’லீடர்’ என்றொரு தெலுங்குப்படம் இருக்கிறது ’பாகுபலி39 புகழ் ராணா நடித்தது அதில் அவருக்கு அப்பா சுமந்த் அவர் ஆந்திரத்தின் முதலமைச்சராக இருப்பார் ஒரு விபத்தில் இறந்துவிடுவார் ராணா இந்தியா வருவார் வந்தபிறகுதான் ராணாவுக்குத் தெரியும் ’நடந்தது விபத்து அல்ல கொலை’ என்று ராணா உடனே அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிப்பார் அதிருப்தி எம்எல்ஏ-க்களை காசுகொடுத்து வளைப்பார் அதட்டி மிரட்டி ஆட்சியும் அமைத்துவிடுவார் ஆனால் ஆட்சி ஊசலாட்டத்திலேயே இருக்கும் ஒரு சட்டத்தைக் கூட ராணாவால் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடிந்திருக்காது அப்போது ராணாவைச் சந்திப்பார் சுஹாசினி அவர்தான் படத்தில் அவருடைய அம்மாசுஹாசினி கண்டிப்பான குரலில் ‘காசு வாங்கிவிட்டு ஆதரவளிப்பவன் எப்படி விசுவாசமாக இருப்பான் என்று எதிர்பார்த்தாய்’ என்று கேட்பார் ராணா தீச்சுட்ட புழுவென சுருங்கிவிடுவார் அப்படியே இன்னொரு கேள்வியையும் கேட்பார் ‘நீ தலைவனாக வேண்டுமென்றே நான் விரும்பினேன் அரசியல்வாதியாக வேண்டும் என்றில்லை’ என்பார் அடுத்தென்ன ராணா அனைத்தையும் துறப்பார் மக்களை நோக்கிச் செல்வார் கொதிக்கும் வெயிலில் கால்களில் கொப்புளம் பொங்க நடப்பார் மக்களின் பிரச்னைகளை உண்மையான அக்கறையோடு புரிந்துகொள்ள முயல்வார் ’உங்களுக்கு நான் இருக்கிறேன்’ என்று நம்பிக்கையளிப்பார் கடைசியில் மக்களின் ஆதரவோடு ஆட்சியமைப்பார் ஸ்டார் வார்ஸையும் அவெஞ்சர்ஸையும் தேடித்தேடிப் பார்க்கும் ராகுல் லீடரையும் பார்க்க வேண்டும் அது அவருக்கு படம் அல்ல பாடம் படத்தின் ஆரம்பத்தில் அரசியல்வாதியாக இருந்த ராணாவை இறுதியில் தலைவன் ஆக்கியது எது தியாகம்அதோ ஒடிசாவில் நவீன் இருக்கிறார் குடும்பம் குட்டி என எதுவுமில்லை அவருக்கு வைத்திருப்பதோ இரண்டே இரண்டு ஜிப்பாக்கள் சொத்துமில்லை சுகமுமில்லை ஆனால் அசைக்க முடியாத மக்கள் தலைவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் எப்படி ஒரே சொல்தான் ’தியாகம்’ சூழ்ச்சிகள் வியூகங்கள் வீரவுரைகள் இப்படி எதுவுமே தலைவர்களை உருவாக்கிவிடாது தலைவர்களை உருவாக்குவது ஒன்றே ஒன்றுதான் அது ‘தியாகம்’ விலா தெரியும் நெஞ்சும் ஒட்டிய வயிறும் அரையாடையுமாக காந்தி வந்துநின்றபோது இந்தியாவே அவர் முன் பணிந்தது ஏன் அவர்தம் தியாகத்தால் படிக்காதவர் பாமரர் பெரிய பேச்சாளரும் இல்லை ஆனால் காமராஜரை கர்மவீரர் என்று உச்சி முகர்கிறது இந்நாடு எதனால் அவர்தம் தியாகத்தால்ஆம் அரசியல்வாதிகள் ஆண்டுக்கு ஆயிரம்பேர் கிடைப்பார்கள் ஆனால் தலைவனென்று ஒருவனை அடைவதற்கு தசாப்தங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் அரசியல்வாதிகள் கானல் நீர் காற்றுப் பலூன்கள் காகித ஓடங்கள் ஆனால் தலைவன்கள் அப்படியல்ல அவர்கள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்திருக்கும் மாகடல் காய்த்துப் பழுத்து கைகளில் விழும் இன்கனி புயல்காற்றைக் கிழித்து பறக்கும் பெருநாவாய் தலைவன்களே இங்கே விதி சமைக்கிறார்கள் தலைவன்களே இங்கே வழி அமைக்கிறார்கள் தலைவன்களே இங்கே வரலாற்றில் வாழ்கிறார்கள்அத்தகைய தலைவன்களால் அன்று நிறைந்திருந்தது காங்கிரஸ் நேரு படேல் ஆசாத் காமராஜர் ராஜாஜி என எத்தனை பேர் அத்தனை பேரும் தியாகிகள் இப்போதோ எங்கு திரும்பினாலும் வெறும் அரசியல்வாதிகள் யார் அவர்கள் லாப நஷ்ட கணக்குப் பார்க்கும் கணக்குப்பிள்ளைகள் ’கட்சித் தோற்றால் தோற்கிறது நான் ஜெயித்துவிட்டேனே’ என்று மகிழும் சிறுமதியாளர்கள் இவர்களை வைத்துக்கொண்டு போருக்கெழுவது இம்சை அரசனில் வடிவேலு போருக்கெழுவது மாதிரிதான் அனைத்தும் வேடிக்கையாகவே முடியும் ராகுல் அடுத்த காரியக்கமிட்டி கூட்டத்தில் அவர்களை நோக்கிச் சொல்ல வேண்டிய சொல் ஒன்றே ‘எல்லாவற்றையும் உதறிவிட்டு என்னுடன் வந்து நில்லுங்கள் மக்களுக்காகக் குரல் கொடுங்கள் மக்களின் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் உடனிருங்கள் நம்மை ஏன் அவர்கள் கைவிடப்போகிறார்கள்’ என்பதுதான்எதுவாகவும் இருக்கட்டும் ராகுலின் குரல் முன்னெப்போதையும்விட இப்போதுதான் அதிகமாகத் தேவைப்படுகிறது நீட்டில் இருந்து நிதிவரை மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டுவரும் சூழலில் அவரது குரல் அதி அவசியமானதாகிறது பினராயி விஜயன் ‘மோடி கேரளாவை பாரபட்சமாக நடத்துகிறார்’ என்று சொன்னால் அது மற்றுமொரு செய்தி ஆனால் ராகுல் கேரளத்துக்கு வந்து ‘மோடி உத்தரப்பிரதேசத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கேரளாவுக்கு கொடுப்பதில்லை’ என்று சொன்னால் அது முக்கியச் செய்தி நாளைக்கே தமிழ்நாட்டுக்கு வந்து நீட்டுக்கு எதிராக ஒரு குரல் அப்படியே ஆந்திரா சென்று சிறப்பு அந்தஸ்துக்கு ஆதரவாக ஒரு குரல் அடுத்து மேற்குவங்கத்துக்கு சென்று மத வன்முறைகளுக்கு எதிராக ஒரு குரல் அதற்கடுத்து வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று பழங்குடியின உரிமைகளுக்கு ஆதரவாக ஒரு குரல் இதைத்தான் இந்தியா எதிர்பார்க்கிறது காங்கிரஸ் தலைவரிடம் டைமிங் வசனங்களையோ ரைமிங் முழக்கங்களையோ அல்லஅதிகபட்சமாக இருக்கலாம் ஆனால் என்றேனும் ஒருநாள் ராகுல் இந்தியாவின் தலைவராகக் கூடும் அப்போது வயநாடு வீற்றிருக்கும் திசைநோக்கி வணங்க வேண்டும் அவர்

Leave A Reply

Your email address will not be published.