ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது – வைகோ குற்றச்சாட்டு

0 7

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது என நீதிமன்றத்தில் வைகோ குற்றம் சாட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதல்முறையாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார் நேற்று காலை ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பாக அந்நிறுவனம் தாக்கல் செய்த  வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராகச் சேர்க்க உள்ளீடு மனுத் தாக்கல் செய்து வாதாடிய வைகோ சென்னையில் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் திருச்சி வந்ததால் அவரது வருகையால் திருச்சி விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இருந்ததுஅப்போது வைகோ “ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு இன்றைக்கு நீதியரசர் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது நான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக என்னையும் இந்த வழக்கில் விசாரணைக்காக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தேன்இயற்கைக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துக் கடந்த 1991-ம் ஆண்டில் இருந்தே தொடர்ச்சியாகப் போராடி வருகிறேன் நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயங்களில் வழக்காடி உத்தரவு பெற்றவன் நான் கடந்த 2013 மார்ச் 23-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான நச்சுப்புகையால் மக்கள் பாதிக்கப்பட்டனர் அதனால் ஏற்பட்ட போராட்டங்களுக்குப் பிறகு 29-ம் தேதி ஆலையை அரசு மூட உத்தரவிட்டது அதை எதிர்த்து ஆலை நிர்வாகம் நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது அந்த வழக்குகளில் நானும் ஒரு தரப்பினராக உள்ளேன் இந்த வழக்குகளில் பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளேன் அதனால்தான் வழக்கில் என்னையும் தரப்பினராக சேர்த்திட கோரினேன் தமிழக அரசும் மாசுக் கட்டுப்பாடு வாரியமும் தொடக்கத்தில் இருந்தே ஆலைக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனஸ்டெர்லைட் வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் கோகலே “நீங்கள் பசுமைத் தீர்ப்பாயம் வழக்கறிஞரா அல்லது ஸ்டெர்லைட் ஆலை வழக்கறிஞரா எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் அந்த வழக்கின் தீர்ப்பில் நீதியரசர் எனது செயல்பாடுகள் குறித்துப் பாராட்டி தீர்ப்பு எழுதியுள்ளார் இப்படியான சூழலில்தான் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய 13 பேரை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகச் செயல்பட்டு சுட்டுக் கொலை செய்துள்ளது எனப் பேசினேன் எனது உள்ளீடு மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்த வழக்கு வரும் 20-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளதுகடந்த 24 வருடங்களுக்கு மேலாக நிலம் நீர் காற்று உள்ளிட்ட அனைத்தையும் நாசப்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறோம் அப்படிப்பட்ட ஆலையை நடத்திவரும் வேதாந்தா நிறுவனத்திடம் மத்திய அரசு  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வழங்கியுள்ளதுஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வரும் 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்துகொள்ள உத்தரவிட்டுள்ளதுநீதிமன்ற உத்தரவின் பேரில் நடக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் தமிழகம் முழுக்க பட்டிதொட்டிகளில் உள்ள இளைஞர்கள் மாணவர்கள் மீனவர்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகத் தமிழகம் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டும்தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாமல் ஒரு குடம் தண்ணீருக்காகப் பல கிலோமீட்டர்கள் அலையும் சூழல் மக்களுக்கே இப்படியான சூழல் என்றால் ஆடு மாடுகள் மற்றும் விலங்கினங்கள் நிலை அதைவிடப் பரிதாபம் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவியாய் தவிக்கிறார்கள் இந்த நிலையில் தனியார் தண்ணீர் நிறுவனங்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தண்ணீரைக் கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்க்கிறார்கள் சென்னையில் ஒரு குடம் தண்ணீர் கிடைப்பதற்கு மக்கள் பாடாய்ப் படுகிறார்கள் வரும் 15 நாள்களுக்குள் தமிழகத்தில் தண்ணீர் வறட்சி என்பது தாங்க முடியாத வேதனையும் சோதனையாக அமையும் இந்த விவகாரத்தில் அரசு வேடிக்கை பார்க்காமல் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் மழை வரும் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விடும் என்று அரசு நினைத்து இருப்பது சரியானது அல்லதமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைச் சரியான நேரத்தில் தூர்வாரி இருந்தால் தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கும் தண்ணீர் பஞ்சம் தீருவதற்கும் வாய்ப்பாக இருந்திருக்கும் இப்படியான சூழல் ஏற்பட்டிருக்காது இப்போதே இப்படியான நிலை என்றால் காவிரியில் மேக்கே தாட்டூ அணை கட்டப்பட்டால் என்ன நிலை ஏற்படும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து அம்மாநில அமைச்சர் பேசுகிறார் அதை மத்திய அமைச்சர் சதானந்த கவுடா வழிமொழிந்து பேசுகிறார்மேக்கே தாட்டூ அணைக் கட்டப்பட்டால் எதிர்காலத்தில் தமிழகம் மிக மோசமாகப் பாதிக்கப்படும் ராசிமணலில் அணை கட்ட வேண்டும் எனத் தமிழக விவசாயிகள் கூறிவருகிறார்கள் அதை நான் ஆதரிக்கிறேன் ஆனால் அதைவிட முதல்கட்ட கடமை என்பது மேக்கே தாட்டூவில் அணை கட்டுவதை தடுப்பது ஆகும்தோழர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து மெத்தனமாகச் செயல்படுகிறது அவரைச் சிறையில் வைத்து கொடுமை செய்த காலத்தில் அவரை நான் சந்தித்தேன் முகிலன் தமிழக மக்களின் பிரச்னைகளுக்காகப் போராடிய ஒரு போராளி அவர் கடந்த மூன்று மாதங்களாகக் காணவில்லை அவர் என்ன ஆனார் என்பது மர்மமாக உள்ளது இது மிகப்பெரிய மனித உரிமை மீறல் பிரச்னை ஒருவேளை முகிலனுக்கு ஏதேனும் நடந்திருந்தால் அதற்குத் தமிழக அரசுதான் பொறுப்பு என்றார்

Leave A Reply

Your email address will not be published.