‘யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்கலாம்; ஆனால்…’ – என்ன சொல்கிறார் எம்.எல்.ஏ. கலைச்செல்வன்

0 7

அ-திமுக-வுக்கு ஒற்றைத் தலைமை தேவை என விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வனும் கூறியுள்ளார்விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது “சென்னையில் நடந்த மாவட்டச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு இல்லை தகவல் சொல்லப்படவில்லை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது தலைமைக்கழகத்தில் இருந்த தொலைபேசி வாயிலாகவும் இல்லையெனில் கடிதம் வாயிலாகவும் அழைப்பு வரும் என்ன காரத்தினாலோ தகவல் தெரிவிக்கவில்லை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ராஜன் செல்லப்பா கூறிய கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாக உள்ளது இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் அதிமுக சோதனையான கால கட்டத்தில் இருக்கின்றது குறிப்பாக ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளதுராஜன் செல்லப்பாவைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் அதே கருத்தைக் கூறியிருக்கிறார் என்னுடைய கருத்தும் அதுதான் எம்ஜிஆர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கப்பட்ட இயக்கம்  யார் வேண்டுமானாலும் இந்த இயக்கத்துக்குத் தலைமை ஏற்கலாம் சுயநலமில்லாத ஒற்றைத் தலைமை தேவை அது கட்சி நிர்வாகிகள் அடிமட்டத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாருடன் எல்லாம் கூட்டணிவைக்கக் கூடாது என்று கூறினார்களோ அதை அவமானமாகக் கருதியவர்களுடன் இன்று கூட்டணி வைத்துள்ளனர்இந்தக் கூட்டணியால் எந்த பிரயோஜனமும் இல்லாமல் இந்த இயக்கத்தை அவமானப்படுத்தியுள்ளனர் என்பது தேர்தலில் வாங்கிய வாக்குகள் மூலம் தெரிகிறது வாக்கு வங்கி மிகப் பெரிய அளவில் சரிந்துள்ளது இனி மேலாவது எதிர் காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எண்ணத்துக்கு ஏற்றார்போல் கூட்டணி வைக்க வேண்டும்” எனக் கூறினார் 

Leave A Reply

Your email address will not be published.