முன்பதிவு தேவையில்லை… அத்திவரதர் உற்சவ வைபவம் குறித்த அறிவிப்பு வெளியானது!

0 6

40 ஆண்டுகளுக்குப் பிறகு அனந்தசரஸ் தெப்பக்குளத்திலிருந்து வெளிப்படும் அத்திவரதர் வரும் ஜூலை 1 – ம் தேதி பக்தர்களுக்குத் தரிசனம் தரவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளைக் கோயில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுவருகிறது. அத்திவரதர் எழுந்தருளும் உற்சவ வைபவம் குறித்த பல்வேறு வதந்திகள் பரவிக்கொண்டிருந்த நிலையில் விழா ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பைக் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அத்திவரதரைத் தரிசிக்க எந்தவித முன்பதிவுகளும் தேவையில்லை என்றும் நேரடியாகச் சென்று தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இணையத்தில் முன்பதிவு செய்யவேண்டும் என்ற தகவல் மக்கள் மத்தியில் பரவியிருந்ததால் அதுபற்றிய அறிவிப்புகளுக்காகக் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் (ஜூலை) 1 – ம் தேதி அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளிப்படும் அத்திவரதர் முதல் 38 நாள்கள் சயனகோலத்திலும், கடைசி 10 நாள்கள் நின்ற நிலையிலும் காட்சியளிக்கிறார். ஆகஸ்டு 17 – ம் தேதி அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்துக்குச் சென்றுவிடுவார்.   அத்திவரதரை பொதுமக்கள் தரிசனம் செய்யக் காலை 6 மணி முதல் மதியம் 12 வரையும், மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் அனுமதிக்கப்படுவார்கள். கட்டணமில்லாத தர்ம தரிசனம் செய்ய விரும்புவோர் கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். சிறப்பு தரிசனம் செய்ய 50 ரூபாய் கட்டணம் செலுத்தி அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம். முற்பகல் 11 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையும்  ரூ.500 கட்டணம் செலுத்தி சகஸ்ர நாம அர்ச்சனை செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

Leave A Reply

Your email address will not be published.