`இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதால் பள்ளி மாணவி சஸ்பெண்டு!’ – கலெக்டரிடம் தந்தை புகார்

0 6

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் சமூக வலைதளத்தைப் பயன்படுத்தியதாகக் கூறி பள்ளியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட எட்டாம் வகுப்பு மாணவி கலெக்டரிடம் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுதேனி ஜிஹெச்ரோட்டில் வசிப்பவர் ரவி இவரின் மகள் மயூர பிரியா தேனியில் பிரபலமான தனியார் இன்டர்நேஷனல் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார் பள்ளி மாணவ மாணவிகள் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்றவற்றைப் பயன்படுத்த கூடாது எனப் பள்ளியில் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் மயூர பிரியா இன்ஸ்டாகிராமில் அக்கவுன்ட் வைத்திருந்ததாகக் கூறி அவரை இரண்டு நாள்கள் சஸ்பெண்டு செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது இது தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மயூர பிரியாவின் தந்தை ரவி மற்றும் தாய் இருவரும் மாவட்டக் கலெக்டரை சந்திக்க வந்திருந்தனர் “அது ஒரு இன்டர்நேஷனல் பள்ளி பாடங்கள் வீட்டுப்பாடங்கள் அனைத்தும் இன்டர்நெட் உதவியுடன்தான் நடக்கிறது அப்படி இருக்கையில் தவறுதலாகக்கூட என் மகள் இன்ஸ்டாகிராம் பக்கம் செல்லவில்லை ஆனால் பள்ளி நிர்வாகம் என் மகளை மிரட்டி யாரோ ஒருவரது இன்ஸ்டாகிராம் ஐடி-யைக் காட்டி இது அவளுடையது எனக் கூறி இல்லாத தவற்றைச் செய்ததாக எழுதி வாங்கியிருக்கிறார்கள் அதோடு இரண்டு நாள்கள் சஸ்பெண்டு செய்துவிட்டார்கள்இதைக் கண்டித்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நேற்று மாவட்டக் கலெக்டர் பல்லவி பல்தேவை சந்திக்க வந்தேன் ஆனால் அவர் என்னைச் சந்திக்காமல் அவரது பணியை மட்டுமே செய்துகொண்டிருந்தார் உடனே குழந்தைகள் நல அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க 1098 என்ற எண்ணில் புகார் தெரிவித்தேன் அத்தோடு மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்துவுக்கும் புகார் செய்தேன் எனது புகார் தொடர்பாக விசாரிப்பதாகக் கூறினார்கள்இந்நிலையில் இன்று என் மகள் கைப்பட எழுதிய புகார் மனுவோடு கலெக்டரை சந்திக்க வந்திருக்கிறேன் செய்யாத தவற்றைச் செய்ததாகக் கூறி எனக்கும் என் மகளுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திய பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்மயூரி பிரியாவின் தந்தை ரவி சிஇஓ அலுவலக வட்டாரத்தில் இது தொடர்பாக விசாரித்தபோது “புகார் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து குழந்தைகள் நல அமைப்பின் அதிகாரிகள் பள்ளிக்கு நேரடியாகச் சென்று விசாரித்தார்கள் தவறு பள்ளி நிர்வாகத்தின் மீது என்பது தெளிவானது இனி இது போன்ற பிரச்னைகள் வராமல் இருக்க பள்ளி நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது அந்த மாணவி நாளை முதல் பள்ளிக்குச் செல்வார்” என்றனர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதற்காக எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் தேனியில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது

Leave A Reply

Your email address will not be published.