`மேரேஜ் செய்ய புகார் கொடுத்தால் அரஸ்ட் பண்ணீட்டாங்க!’ – காவல் நிலையத்தில் பிரிந்த காதல் 

0 4

பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் வாசலில் 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அமர்ந்திருந்தார் கல்யாணம் செய்து வைக்க புகார் கொடுத்தால் அவரை அரஸ்ட் பண்ணிவிட்டார்கள் என்று புலம்பிக்கொண்டிருந்தார் இந்தத் காதல் காவல் நிலையத்தில் பிரிந்துவிட்டது  பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியைச் சேர்ந்தவர் ரசீதா(பெயர் மாற்றம்) இவர் கடந்த மூன்று நாள்களுக்கு முன் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் அதில் நானும் பம்மலைச் சேர்ந்த அரவிந்த்தும் காதலர்கள் என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி என்னைக் கர்ப்பமாக்கிவிட்டு அரவிந்த் ஏமாற்றிவிட்டார் எங்களுக்கு திருமணம் செய்துவையுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது  புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஃப்ரான்வின் டேனி காதலன் அரவிந்த்தை அழைத்து விசாரணை நடத்தினார் அப்போது அவர் ரசீதாவை காதலித்தது உண்மைதான் என்று கூறியதோடு திருமணம் செய்யவும் முதலில் சம்மதித்தார் ஆனால் சில காரணங்களுக்காக காதல் ஜோடிக்கு திருமணம் நடக்கவில்லை  இதனால் மீண்டும் பஞ்சாயத்து காவல் நிலையத்துக்கு வந்தது போலீஸார் இருவருக்கும் நீண்ட நேரம் கவுன்சலிங் அளித்தனர் ஒருகட்டத்தில் அரவிந்த் ரசீதாவின் நடவடிக்கைகளைப் பார்த்து திருமணம் செய்ய மறுத்துவிட்டார் இதனால் அரவிந்த்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்  இதுகுறித்து போலீஸார் கூறுகையில் “அரவிந்த்தும் ரசீதாவும் பள்ளிப் பருவத்திலேயே காதலித்துள்ளனர் அரவிந்த் பட்டதாரி ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார் வீட்டுக்குத் தெரியாமல் ரசீதாவுக்கு மோதிரம் அணிவித்து தாலியும் கட்டியுள்ளார் அரவிந்த் அதன்பிறகு இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர் அப்போது ரசீதா கர்ப்பமடைந்துள்ளார்  இவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்ளாததால் கர்ப்பத்தைக் கலைத்ததாக ரசீதா விசாரணையின்போது தெரிவித்தார் தற்போது அரவிந்த்துக்கும் தனக்கும் திருமணம் செய்து வைக்கும்படி எங்களிடம் புகார் கொடுத்தார் சம்பவம் நடந்த இடம் பம்மல் என்றாலும் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினோம்  அரவிந்த்தை திருமணம் செய்து வையுங்கள் என்ற ஒரே கோரிக்கையை மட்டும் ரசீதா தொடர்ந்து வலியுறுத்தினார் ஆனால் ரசீதாவின் நடவடிக்கைகள் பிடிக்காத அரவிந்த் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார் இதனால்தான் அரவிந்த்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம் என்றார் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் “ரசீதா நடந்து கொண்ட விதம் ஒருகட்டத்தில் எங்களுக்கே எரிச்சலை ஏற்படுத்தியது பூந்தமல்லி மகளிர் போலீஸார் வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் அதோடு காவல் நிலைய வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார் அவரை சமரசப்படுத்தினோம் அரவிந்த் திருமணம் செய்ய மறுத்ததால் ரசீதா கர்ப்பம் குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த அழைத்துச் சென்றோம் அங்கு அவர் சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர் இதனால் ரசீதா கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை கண்டறியமுடியவில்லை இருப்பினும் ரசீதாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய குற்றத்திற்காக அரவிந்த்தை கைது செய்துள்ளோம்  கைது செய்தபிறகு ரசீதா எங்களிடம் `திருமணம்தான் செய்ய வைக்கக் கூறினேன் நீங்கள் எதற்கு கைது செய்தீர்கள்39 என்று கேள்வி கேட்டார் நாங்களும் மூன்று நாள்கள் முடிந்தளவுக்கு அரவிந்த்திடம் பேசிப் பார்த்துவிட்டோம் அவர் திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை இதனால் சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்  அரவிந்த் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் “ரசீதாவை எந்தளவுக்கு உயிருக்கு உயிராக காதலித்தேனோ அந்தளவுக்கு இப்போது வெறுக்கிறேன் அவரைத் திருமணம் செய்து கொள்ள நான் சென்றபோது அங்கு நடந்த சம்பவத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது அவரோடு சேர்ந்து வாழ்வதைவிட சிறைக்குச் செல்வது மேல் என்று கூறியுள்ளார் அதே நேரத்தில் ரசீதா போலீஸாரிடம் அரவிந்த்தை கைது செய்யாதீர்கள் அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறினார்  மகளிர் காவல் நிலையத்தில் நடந்த காதல் ஜோடி வழக்கு பூந்தமல்லி போலீஸாருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது இருப்பினும் இன்ஸ்பெக்டர் ஃப்ரான்வின் டேனி  திறம்பட வழக்கை விசாரித்ததோடு பொறுமையாக இந்தச் சம்பவத்தைக் கையாண்டுள்ளார் இதனால் போலீஸ் உயரதிகாரிகள் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்  

Leave A Reply

Your email address will not be published.