பெருகிவரும் அங்கீகாரமில்லாத பள்ளிகள்! பெற்றோர் கவனத்துக்கு… கல்வி வழிகாட்டல்!

0 13

  39தமிழ்நாட்டில் 709 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை எனவே அவற்றில் மாணவர்களைச் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்39 எனத் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சமீபத்தில் தெரிவித்திருந்தது இது பலருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது அதைத் தொடர்ந்து அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை பிள்ளையின் கல்விக்காகச் செலுத்தும் பெற்றோருக்குக் கவலையை அளிக்கக் கூடியதுதானே செய்தித்தாள் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு விதங்களில் விளம்பரங்கள் செய்யப்படுவதால் அந்தப் பள்ளி மீது நம்பிக்கைக் கொண்டே தங்கள் மகனை மகளைச் சேர்க்கிறார்கள் ஆனால் அப்படிச் சேர்க்கும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டியது அவசியம் பொதுவாகப் பள்ளியில் சேர்க்கையில் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கான தகுதியுடைய கல்வித் தகுதிக் கொண்டவர்களா விளையாட்டு மைதானம் இருக்கிறதா காற்றோட்டமான வகுப்பறைகள் இருக்கின்றனவா சரியான பராமரிப்பு கொண்ட வாகன வசதிகள் உள்ளனவா உள்ளிட்ட பல விஷயங்களைக் கவனிக்கச் சொல்வது வழக்கம் ஆனால் தற்போது அவற்றோடு இன்னும் சிலவற்றைச் சோதிக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது அவை குறித்து தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநர் எஸ்கண்ணப்பன் வழிகாட்டுகிறார் மெட்ரிகுலேசன் பள்ளிகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் உள்ள 4380 பள்ளிகளுக்கு அங்கீகாரம் இருக்கிறது தற்போது அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி பிரச்னை என்பது நர்சரி மற்றும் சில சிபிஎஸ்இ பள்ளிகளுக்குத்தான் வருகிறது மெட்ரிகுலேசன் பள்ளிகள் 1950-ம் ஆண்டு தொடங்கி 80-களுக்குப் பிறகு அதிகரித்தன இதற்கான முறையான அங்கீகாரமும் அங்கீகாரக் காலம் முடிவடைந்த பள்ளிகள் ரெனிவலும் செய்துவருகின்றன அதற்காக ரெனிவல் செய்யும் விதத்தை எளிமையாக்கி இருக்கிறோம் வட்டாட்சியர் அரசு பொறியாளர் தீயணைப்புத்துறை அலுவலர் சுகாதாரத்துறை அதிகாரி ஆகிய நான்கு பேரிடம் சான்றிதழ்களை ஒரு தனியார் பள்ளி வாங்கிவிட்டால் இணையதளம் வழியே அந்தப் பள்ளிக்கு ரெனிவல் பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் இந்த ஆண்டில் மட்டுமே 2300 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன அவற்றை ஜூலை மாதத்துக்குள் முடித்துவிடத் திட்டமிட்டிருக்கிறோம் அதனால் மெட்ரிகுலேசன் பள்ளிகள் அங்கீகாரமற்ற பள்ளி என்று ஒன்றுகூட இருக்க வாய்ப்பில்லைPhoto Representative Imageநர்சரி பள்ளிகள் எங்கள் பொறுப்பின் கீழ்வராது என்றாலும் பொதுவாக ஒரு தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளையைச் சேர்க்கும் பெற்றோர் பிரின்ஸ்பால் அல்லது தலைமை ஆசிரியரிடம் அந்தப் பள்ளி அங்கீகாரம் பெற்றதற்கான சான்றிதழைக் கேட்கலாம் மகனையோ மகளையோ படிக்க அனுப்பும் பெற்றோர்க்கு நிச்சயம் உரிமை இருக்கிறது இப்படிக் கேட்டு பிள்ளைகளைச் சேர்த்தால் பின்னாளில் இது தொடர்பான பிரச்னை வரப்போவதில்லை அப்படித் தொடர்ந்து பலர் கேட்கும்பட்சத்தில் அந்தப் பள்ளியே நோட்டீஸ் போர்ட்டில் அல்லது எல்லோரும் பார்க்கும் வகையில் வைப்பதற்குக்கூட வாய்ப்பிருக்கிறது என்கிறார் இயக்குநர் எஸ்கண்ணப்பன் பெரிய பள்ளிகள் அதிக விளம்பரம் செய்யும் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோரின் எண்ணத்தில் தவறு இல்லை ஆனால் பள்ளிக் கட்டணம் வீட்டுக்கும் பள்ளிக்குமான தூரம் உள்ளிட்ட விஷயங்களோடு அந்தப் பள்ளி அரசின் அங்கீகாரம் பெற்றிருக்கிறதா என்பதையும் அவசியம் பாருங்கள் அதுவே உங்கள் மகளின் மகனின் நிம்மதியான படிப்புக்கு நல்லது  

Leave A Reply

Your email address will not be published.