“என் நம்பரை பிளாக் செய்து வைத்திருக்கிறார்!” – ஆட்சியர் அன்பழகன் மீது ஜோதிமணி குற்றச்சாட்டு

0 16

  “அதிகாரமிக்க கரூர் நாடாளுமன்றத் தொகுதி எம்பி-யாக இருக்கிறேன் ஆனால் மக்கள் குறைகளைப் பத்தி மாவட்டக் கலெக்டர் என்கிற முறையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு போன் செய்தால் போன் போகமாட்டேங்குது எனது போன் நம்பரை அவர் பிளாக் லிஸ்டில் வைத்துள்ளார் என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி அதிரடியாகக் குற்றம்சாட்டினார் ஜோதிமணிக்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற யுத்தம் ஊர் அறிந்ததுதான் 39ஆளுங்கட்சிக்கு சாதகமாகச் செயல்படுகிறார் ஆட்சியர் அன்பழகன் தேர்தல் நேர்மையா நடக்கணும்னா தேர்தல் ஆணையம் உடனடியாக ஆட்சியரை மாற்றணும்39 என்று அதிரடியாகக் குற்றம்சாட்டினார் ஆனால் மாவட்ட ஆட்சியர் அன்பழகனோ 39ஜோதிமணியும் செந்தில் பாலாஜியும் 100 அடியாட்களை என் வீட்டுக்கு அனுப்பி எனக்கும் என் குடும்பத்துக்கும் கொலைமிரட்டல் விடுத்தார்கள் மாவட்ட எஸ்பி ராஜசேகரன் வந்து என்னைமீட்டார் அவர்கள் இருவர்மீதும் புகார் கொடுத்திருக்கிறேன்39 என்று அதிரடியாகப் பேட்டிக்கொடுத்தார்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜோதிமணிக்கு போன் செய்து 39தேர்தலை நிறுத்திவிடுவேன்39 என்று மிரட்டல் தொனியில் பேசியதாக ஒரு ஆடியோவை ஜோதிமணி தரப்பு சமூகவலைதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்நிலையில் ஒருவழியாகத் தேர்தல் முடிந்து ஜோதிமணியும் கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக அபாரமான வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றார்  இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் கடும் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுவதாகச் சொல்லப்படுகிறது மாவட்ட ஆட்சியர் அன்பழகனும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர்விஜயபாஸ்கரும் அரவக்குறிச்சி தொகுதியில் ஆய்வுக்கூட்டம் நடத்தியதோடு “குடிநீர் பிரச்னை என்பது இங்கே இல்லை இருந்தாலும் கூடுதலாகத் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்கிற ரீதியில் பேட்டியளித்தனர் இதற்கிடையில் தங்களுக்கு ஆய்வுக்கூட்டத்துக்கு அழைப்பில்லை என்று குமுறிய ஜோதிமணியும் தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜியும் தனியாக மக்களைச் சந்தித்து குடிநீர் பிரச்னையைக் கேட்டறிந்தனர் அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜோதிமணி “கரூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு விஜிலென்ஸ் கமிட்டி சேர்மனே நாடாளுமன்ற உறுப்பினர்தான் அவங்க தலைமையில்தான் கூட்டமே நடத்தணும் ஆனா ஒரு ரிவியூ மீட்டிங்கை ஆய்வுக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொல்லாம சட்டமன்ற உறுப்பினருக்குத் தெரியாம நடத்துறார் அது ரொம்ப தப்பு அதுவும் இல்லாம சட்டமன்ற உறுப்பினர் சொல்லித்தான் வாட்ஸப்பை பார்த்துதான் நான் ஆய்வுக்கூட்டம் நடக்குதுங்கிறதையே தெரிஞ்சுகிட்டேன் அதிகாரமிக்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் முக்கியத்துவத்தை தட்டிக்கழிக்கும் போக்கு மாவட்ட ஆட்சியரிடம் இருக்கு அதுமட்டுமல்ல மாவட்ட ஆட்சியர் தேர்தல் சமயத்துல ஒருதலைப்பட்சமா இருந்தது தமிழ்நாட்டுக்கே தெரியும் அப்ப நடந்த பிரச்னைகளையொட்டி அப்போதிருந்தே என் போன்நம்பரை மாவட்ட ஆட்சியர் பிளாக் பண்ணியே வச்சுருக்கார் நான் நாடாளுமன்ற உறுப்பினரானதுக்குப் பிறகு அதை எடுத்திருப்பார்னு நினைச்சேன் ஆனா இன்னைக்கும் பிளாக்குலதான் இருக்கு அவர் பிசி-க்கு போன் பண்ணினேன் அவர்கிட்ட 39தயவுசெய்து என் நம்பரை பிளாக்குல இருந்து கலெக்டரை எடுக்கச் சொல்லுங்க39னு சொல்லி இருக்கேன் பார்ப்போம் என்றார் அதிரடியாக 

Leave A Reply

Your email address will not be published.