“புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை!” – சுருக்குக் கம்பி காயத்துடன் சுற்றிவரும் காட்டுமாடு!

0 12

நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்துக்கு உட்பட்ட கேத்தி வனப்பகுதி அருகே காலில் சுருக்கு வலைக்கம்பி சிக்கியதில் காலில் சீழ் காயத்துடன் காட்டுமாடு ஒன்று நடக்கமுடியாமல் வேதனையில் தவித்து வருகிறது.நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்துள்ள கேத்தி பகுதிகளில் காட்டுமாடுகள் கூட்டமாக உலவுகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி விளை நிலங்களை ஒட்டிய பகுதிகள், குடியிருப்பு, தேயிலைத் தோட்டங்களில் முகாமிடுகின்றன. இரவு நேரங்களில் அருகில் உள்ள வனப்பகுதியில் தஞ்சம் புகுகின்றன. இந்த நிலையில், இந்தப் பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காட்டுமாடு ஒன்றின் காலில் சுருக்குக் கம்பி காலில் சிக்கியது. காலில் நன்கு இறுக்கிய நிலையில் காணப்படும் சுருக்குக் கம்பி காட்டுமாட்டின் காலில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்பி அகற்றப்படாமல் உள்ள நிலையில், சீழ் காயத்துடன் மேய்ச்சலில் ஈடுபடமுடியாமல் வேதனையில் தவித்துவருகிறது.இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், “கடந்த ஒரு வாரமாகக் காலில் சுருக்குக் கம்பியுடன் நடக்க முடியாமல் இந்தப் பகுதியில் உலவுகிறது. காலில் ஏற்பட்ட காயத்துடன் சீழ் பிடித்த நிலையில் நடக்கக்கூட முடியாமல் வேதனையில் உள்ளது. சட்ட விரோதமாக முயல் அல்லது பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த சுருக்குக் கம்பியில் காட்டுமாடு கால் சிக்கியிருக்கக் கூடும். கம்பியை அகற்ற வனத்துறைக்குத் தகவல் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை” என்றனர்.வனத்துறையினரிடம் கேட்டபோது  “வன ஊழியர்களைக் கொண்டு தேடிப் பார்த்தோம். காயத்துடன் உலவும் காட்டுமாட்டை கண்டு பிடிக்க முடியவில்லை” என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.