`இலவச குடிநீர்; பிரமாண்ட பேரணி!’ – அரசியல் கட்சிகளை அதிரவைத்த ரஜினி மக்கள் மன்றம்

0 14

வேலூர் மாவட்டம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலவசமாகத் தினந்தோறும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மழைநீர் சேகரிப்பு மரக்கன்று நடுதல் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி ரஜினி மன்றத்தினர் சோளிங்கரில் நடத்திய பிரமாண்ட பேரணி அரசியல் கட்சிகளைத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறதுதமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் தவித்துவருகிறார்கள் ஆளும்கட்சி ஒரு பக்கம் வருண யாகம் நடத்துகிறது எதிர்க்கட்சி மறுபக்கம் ஆர்ப்பாட்டம் செய்கிறது இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிலவும் கடுமையான தண்ணீர் பிரச்னையை ஓரளவு தீர்க்க ரஜினி மக்கள் மன்றம் களமிறங்கியிருக்கிறது மழைநீர் சேகரிப்பு மரக்கன்று நடுதல் நதிகள் இணைப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சோளிங்கரில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது மாவட்டச் செயலாளர் என்ரவி தலைமையில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன பேரணியைப் பார்த்த அனைத்து அரசியல் கட்சியினரும் அதிர்ந்துபோயிருக்கிறார்கள்அதுமட்டுமின்றி தினந்தோறும் இலவசமாகத் தண்ணீர் வழங்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் முதற்கட்டமாகத் தண்ணீரின்றி தவிக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அங்குள்ள வீடுகளுக்குத் தினமும் சென்று தண்ணீர் வழங்கி வருகிறார்கள் சோளிங்கர் பகுதியைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 4 டேங்க் தண்ணீர் இலவசமாக வழங்கப்படுகிறது அதேபோல் மாவட்டம் முழுவதும் அந்தந்த நகர ஒன்றிய நிர்வாகிகள் மூலம் தினந்தோறும் இலவசமாகத் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனஇதுபற்றி பேசிய மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்ரவி “இதுபோன்ற உதவிகள் தற்காலிகமானதுதான் ஏனெனில் தனிமனிதர் அல்லது ஒரு இயக்கத்தினரால் சில மாதங்களுக்கு மட்டுமே உதவிசெய்ய முடியும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதால் எந்தப் பயனும் இல்லை ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கான செயல் திட்டங்களைத் தீட்ட வேண்டும் அதே சமயம் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் மழைநீரைச் சேகரிக்க வேண்டும் குடிநீரை வீணாக்குவதை போதுமான அளவு தடுக்க வேண்டும்நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதைத் தவிர்த்து தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள வேண்டும் வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும் பிளாஸ்டிக் கழிவுகளை நிலத்தில் வீசுவதைத் தவிர்க்க வேண்டும் இதையெல்லாம் பின்பற்றுவதை தவிர்த்தால் அடுத்த தலைமுறையினருக்கு நாம் மிகப்பெரிய துரோகம் செய்வதாக அமைந்துவிடும் அடுத்த தலைமுறை என்பது குப்பனோ சுப்பனோ இல்லை நம் குழந்தைகள்தான் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் வரும்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டிலிருந்து மீள வேண்டும் என்றால் சிந்தித்துச் செயல்படுங்கள்’’ என்றார்

Leave A Reply

Your email address will not be published.