`தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாகப் பாடினால் பரிசு!’ – அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை 

0 12

காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் செயல்படும் அரசு பள்ளியில் தேசிய கீதம் தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றை சரியான உச்சரிப்புடன் பாடும் மாணவர்களுக்கு 10 ரூபாய் பரிசாக அளித்துவருகிறார் ஆசிரியை கவிதா காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள தென்பாதி மாமண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றுகிறார் கவிதா இவருக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட்டது மாணவ மாணவிகள் சரியான உச்சரிப்புடன் தேசிய கீதத்தைப் பாட பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது  இதுகுறித்து ஆசிரியை கவிதா தன்னுடைய முகநூல் பக்கத்தில் “என்னுடைய பதினேழு ஆண்டுகால பணி அனுபவத்தில் இக்கல்வி ஆண்டில்தான் நான் எதிர்பார்த்த ஒரு நிகழ்ச்சியை நிறைவேற்ற முடிந்தது தொடர் பயிற்சியும் விடா முயற்சியும் நிச்சயம் வெற்றியைத்  தரும் என்பதற்கு சிறந்த உதாரணம் இதுகாலை மற்றும் மாலை வழிப்பாட்டுக் கூட்டங்களில் மாணவர் வரிசையில் நிற்றலில் ஒழுங்குமுறை மற்றும் மாலையில் பாடப்படும் தேசியகீதத்தினைச் சரியான உச்சரிப்பில் பாடுதல் இந்த இரண்டினையும் ஒழுங்குப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகிறோம் ஆனால் ஓரிரு நாள்களே பயிற்சியளித்து விட்டு மறந்து விடுவோம் மாணவர்களும் மறந்து விடுவார்கள் ஆனால் தற்போது பள்ளி தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மூன்று வாரங்களாக தினமும் நண்பகல் 130 மணி முதல் 200 மணி வரையும் மாலை 330 முதல் 410 மணி வரையும் விடா முயற்சியாகப் பயிற்சியளித்ததுடன் சரியான உச்சரிப்பில் பாடும் மாணவர்களுக்கு பத்து ரூபாய் பரிசு அளித்து ஊக்கமளித்து வருவதால் நிறைவான மாணவச் செல்வங்களை உருவாக்க முடிந்ததுபள்ளியில் மொத்தம் 103 மாணவர்கள் எனவே மொத்தத்தில் இதற்காக ஆயிரம் ரூபாய்தான் செலவிடுகிறேன் நாட்டுக்காக ராணுவ வீரர்கள் உயிரையே பரிசாக வழங்கும்போது நாட்டுப்பண்ணிற்காக வழங்கப்படும் இப்பரிசினால் நல்லதொரு மாற்றம் விளைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் இதுகுறித்து ஆசிரியை கவிதா கூறுகையில் “பள்ளியின் உணவு இடைவேளையின்போதுதான் மாணவ மாணவிகளுக்கு தேசிய கீதம் தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றைப் பாட பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது சரியான உச்சரிப்புடன் பாட மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இணைந்து கற்றுக்கொடுத்தோம் அதன்பிறகு மாணவ மாணவிகளும் பாடத் தொடங்கினர் ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பாட வைத்தோம் சிறப்பாகப் பாடியவர்களுக்கு 10 ரூபாய் பரிசு வழங்கினோம் இதுவரை 20 பேர் பரிசுகளை வாங்கியுள்ளனர்  சரியான உச்சரிப்புடன் மாணவ மாணவிகள் பாடும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்   

Leave A Reply

Your email address will not be published.