`நீ யாருய்யா..?’ – நடுரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டருடன் மல்லுக்கட்டிய டூவிலர் ஆசாமி  

0 23

சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்தவருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது   சென்னையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர் சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றவரை போக்குவரத்து போலீஸார் மடக்கினர் அப்போது நடுரோட்டில் வண்டியை நிறுத்தியபடி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அந்த நபர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் ஆதாரத்துக்காக போலீஸார் எடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவிவருகிறது  அந்த வீடியோவில் `நீ யாருய்யா பொது இடத்தில் இப்படி இடையூறு செய்கிறாய்39 என்று போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பைக்கில் வந்தவர் சொல்கிறார் பைக்கின் முன் நின்றபடி இன்ஸ்பெக்டர் அவரிடம் பேசுகிறார் அப்போது இன்ஸ்பெக்டர்` ரோட்டில் சிக்னலுக்காக காத்திருப்பவர்களைக் காட்டியபடி இவர்களையெல்லாம் நான் இடையூறு செய்கிறேனா39 என்று அந்த நபரிடம் கேட்கிறார் அதற்கு பைக்கில் வந்தவர் `ஆமாம் எல்லோருக்கும்தான் இடையூறு செய்கிறாய் என்னை அடிக்க போகிறாயா39 என்று ஆவேசமாகக் கூறுகிறார் உடனே இன்ஸ்பெக்டர் `சிக்னல் போடு39 என்று சொல்ல வாகனங்கள் சாலையில் செல்லத் தொடங்கின இருப்பினும் பைக்கில் வந்தவரும் இன்ஸ்பெக்டரும் நடுரோட்டில் நின்றபடியே தகராறில் ஈடுபட்டனர் இன்ஸ்பெக்டர் `பைக்கில் வந்தவரை காவல் நிலையத்துக்கு வா39 என்று சொல்கிறார் இதற்கு அந்த நபர் `நான் வர முடியாது இப்படிதான் நிற்பேன் எத்தனை மணி நேரமானாலும் இப்படிதான் நிற்பேன்39 என்று கூறுகிறார் இந்தச் சமயத்தில் அந்த பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பெண் கீழே  இறங்கிச் செல்கிறார் அதன் பிறகும் இன்ஸ்பெக்டருக்கும் பைக்கில் வந்த நபருக்கும் இடையே தகராறு தொடர்கிறது`நீ யாரு நீ சொல்வதை நான் கேட்க முடியாது39 என்று இன்ஸ்பெக்டரைப் பார்த்து பைக்கில் வந்த நபர் கூறுகிறார் அதன் பிறகு பைக்கில் வந்தவரிடம் `சார் கொஞ்சம் ஓரமாக வாருங்கள்39 என்று சொல்கின்றனர் அதற்கு அவர் `நான் யார் சொன்னாலும் வர முடியாது39 என்று பிடிவாதமாகச் சொல்கிறார் இதையடுத்து இன்ஸ்பெக்டர் வாக்கிடாக்கியில் அமைந்தகரை காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கிறார் இப்படி சுமார் அரைமணி நேரத்துக்கு மேல் பைக்கில் வந்தவருக்கும் இன்ஸ்பெக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது இந்த வீடியோ 2 நிமிடம் 32 நொடிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது நடுரோட்டில் நடந்த இந்தச் சம்பவத்தை அவ்வழியாகச் செல்பவர்கள் வேடிக்கை பார்த்தபடியே சென்றனர் இந்தச் சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர் இதுகுறித்து போலீஸார் கூறுகையில் “ஸ்கூட்டியில் ஒரு பெண்ணுடன் வந்தவர் ஹெல்மெட் அணியவில்லை இதனால் அவரிடம் இன்ஸ்பெக்டர் வண்டியை ஓரங்கட்டுங்கள் என்று கூறினார் அதற்கு அந்த நபர் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்தார் அரைமணி நேரத்துக்கு மேல் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸாரிடம் அந்த நபர் தகராறு செய்தார் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டியை ஓட்டியதற்காகவும் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்  வழக்கு பதிவு செய்யப்பட்ட அந்த நபர் யார் என்று அமைந்தகரை காவல் நிலையத்தில் விசாரித்தால் `அவரின் பெயர் என்னவென்று தெரியவில்லை ஸ்கூட்டியைப் பறிமுதல் செய்துவிட்டு அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டோம் அவர் வந்த பிறகுதான் முழுவிவரம் தெரியவரும்39 என்று போலீஸார் கூறினர் அமைந்தகரையில் நடுரோட்டில் போக்குவரத்து இன்ஸ்பெக்டருடன் தைரியமாக மல்லுக்கட்டிய அந்த நபரின் வீடியோவைப் பார்த்த போலீஸ் உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் ஏன் விட்டீர்கள் என்று சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் கேள்வி கேட்டுள்ளனர் அதற்குப் பதிலளிக்க முடியாமல் அமைந்தகரை போலீஸாரும் போக்குவரத்து போலீஸாரும் உள்ளனர்  சென்னை அடையாறு பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்ட போலீஸாரிடம் காரில் வந்த குடும்பத்தினர் போலீஸைக் கண்டித்து சாலையில் அமர்ந்தனர் சமீபகாலமாக போலீஸாருக்கு நேரம் சரியில்லை ஹெல்மெட் சோதனை வாகனச்சோதனை ஆகியவற்றில் ஈடுபடும்போது பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டிய சூழலுக்கு சென்னை போலீஸார் தள்ளப்பட்டுள்ளனர் 

Leave A Reply

Your email address will not be published.