`கொலை செய்யச் செல்கிறோம்; வழிவிடுங்கள்’ – போலீஸிடம் உளறிய ரவுடிகள் 

0 25

அடையாறு பகுதியில் மின்னல் வேகத்தில் வந்த காரை போலீஸார் மடக்கிப்பிடித்தனர் அப்போது காருக்குள் இருந்த ரவுடிகள் கொலை செய்யப்போகிறோம் வழிவிடுங்கள் என்று போதையில் உளறியுள்ளனர்சென்னை அடையார் பகுதியில் வாகனச் சோதனையில் போலீஸார் ஈடுபட்டபோது மின்னல் வேகத்தில் வந்த கார் நிற்காமல் சென்றது அதை மடக்கிப்பிடித்த போலீஸாரிடம் காருக்குள் இருந்த ரவுடிகள் கொலை செய்யச் செல்கிறோம் வழிவிடுங்கள் என்று போதையில் உளறியுள்ளனர் சென்னை அடையார் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமைக் காவலர் தீனதயாளன் மற்றும் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் அப்போது இரவு 1130 மணியளவில் அவ்வழியாக மின்னல் வேகத்தில் கார் வந்தது அந்தக் காரை போலீஸார் மடக்கினர் ஆனால் கார் நிறுத்தப்படவில்லைஇதையடுத்து போலீஸார் தங்களுடைய வாகனத்தில் காரை விரட்டினர் நிற்காமல் சென்ற காரை போலீஸார் முந்திச் சென்றனர் இதனால் காரை நிறுத்திவிட்டு அவர்கள் தப்பி ஓட முயன்றனர் இதில் டிரைவர் தப்பி ஓடிவிட்டார் காரின் பின்னால் போதையில் இருவர் இருந்தனர் அவர்களை போலீஸார் பிடித்துவிசாரித்தனர் விசாரணையில் அவர்கள் இருவரும் ரவுடிகள் என்று தெரியவந்தது இதையடுத்து காரை போலீஸார் சோதனை செய்தனர் அப்போது சீட்டுக்குள் கத்திகள் அரிவாள்கள் இருந்தன அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர் இதையடுத்து பிடிப்பட்ட 2 ரவுடிகளையும் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார் அடையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின போலீஸார் கூறுகையில் “ரவுடி வினோவின் கூட்டாளியான பல்லுமதனுக்கும் ஜீவா கும்பலுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவதுண்டு இவர்களுக்குள் நீண்ட காலமாக முன்விரோதம் இருந்துவருகிறது எங்களிடம் சிக்குவதற்கு முன் தேனாம்பேட்டையில் சிவப்பிரகாசம் என்பவரை ஜீவா அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார் இவர்களிடமிருந்து 4 அரிவாள்கள் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன வாகனச்சோதனையில் எங்களிடம் ரமேஷ் ஜீவா சிக்கவில்லை என்றால் ரவுடி கும்பல்களுக்குள் மோதல் ஏற்பட்டிருக்கும் அதைத் தடுத்துள்ளோம் என்றனர்  இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்“வாகனச் சோதனையின் போது சிக்கிய காருக்குள் தேனாம்பேட்டை பர்மா நகரைச் சேர்ந்த ராஜா (36) பக்தவத்சலம் தெருவைச் சேர்ந்த ஜீவா (36) ஆகியோர் போதையில் இருந்தனர் இவர்கள் இருவர் மீதும் கொலை முயற்சி அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன ரவுடிகளான இவர்கள் பள்ளிக்கரணையைச் சேர்ந்த ரவுடி பல்லுமதனைக் கொலை செய்யச் செல்கிறோம் எங்களுக்கு வழிவிடுங்கள் என்று போதையில் உளறியுள்ளனர் அதைக்கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர் உடனடியாக அவர்களை கைது செய்துள்ளோம் தப்பி ஓடிய டிரைவரைத் தேடிவருகிறோம் என்றார் சென்னையில் ரவுடிகள் குறித்து போலீஸார் கணக்கெடுத்துவருகின்றனர் ஏபிசி என்ற ரவுடிகள் வகைப்படுத்தப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுவருகிறது சில நாள்களுக்கு முன் போலீஸாரைத் தாக்கிய ரவுடி வல்லரசு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் அதன்பிறகு ரவுடிகள் கட்டுக்குள் வருவார்கள் என போலீஸார் எதிர்பார்த்தனர் ஆனால் ரவுடிகளின் அராஜகம் அதிகரித்துள்ளதாக உளவுத்துறை ரிப்போர்ட் அளித்துள்ளது அந்த ரிப்போர்ட்டில் ரவுடிகளின் குற்றப்பின்னணி குறித்த தகவல்களும் உள்ளன இதனால்தான் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபிதிரிபாதியும் சென்னை போலீஸ் கமிஷனர் ஏகேவிஸ்வநாதனும் உத்தரவிட்டுள்ளனர் அதன்பேரில்தான் தமிழகம் முழுவதும் ரவுடிகள் குறித்த பட்டியல் எடுக்கப்பட்டுவருவதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்   

Leave A Reply

Your email address will not be published.