`வாட்ஸ்அப்பில் உறவினருக்குச் சென்ற படம்!’ – தவறான நட்பால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்

0 21

“என் மகளைத் திட்டமிட்டு சூழ்ச்சிவலையில் சிக்கவைத்து சாகடித்திருக்கிறார் ஒருவர் அவர்மீது நடவடிக்கை எடுங்கள்3939 என்று காவல்துறையிடம் புகார் கொடுத்தால் 10 நாள்களாகியும் இன்று வரை போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் பணத்தை வாங்கிக்கொண்டு மூடிமறைக்கப்பார்க்கிறார்கள் என் மகள் இறப்புக்கு நியாயம் கிடைக்கும் வரை விடமாட்டேன்3939 என்று கொந்தளிக்கிறார் தந்தைஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நமங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடர்மணி இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்துவருகிறார் இவரின் மனைவி சங்கீதா இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன இவர்களுக்கு குழந்தை இல்லை இந்த நிலையில் சுடர்மணியுடன் நமங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்துவருகிறார் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் இருவரும் நண்பர்களாகப் பழகிவந்தனர் இருவரும் கிராமத்துக்கு வரும்போது சுடர்மணி வீட்டுக்கு சரவணன் அடிக்கடி வந்துள்ளார் அப்போது சுடர்மணியின் மனைவி சங்கீதாவுக்கும் சரவணனுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது இது சுடர்மணிக்குத் தெரியவர இதுகுறித்து கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் கணவனைப் பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் சங்கீதா வசித்துவருகிறார் சரவணன் சங்கீதாவுடன் நெருக்கமாக இருந்தபோது சங்கீதாவுக்குத் தெரியாமல் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு என் ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லையென்றால் இந்தப் படத்தை ஃபேஸ்புக் மற்றும் உன் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிடுவேன் எனச் சரவணன் தொடர்ந்து மிரட்டியுள்ளார்இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி சங்கீதாவின் உறவினர் அறிவழகன் என்பவருக்கு வாட்ஸ்அப் மூலம் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை சரவணன் அனுப்பி வைத்துள்ளார் இதுகுறித்து உறவினர் அறிவழகன் சங்கீதாவிடம் கேட்டதால் மனமுடைந்த அவர் வீட்டிலிருந்த எலி மருந்தைக் குடித்துவிட்டார் அவரின் தாயார் காந்தியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சைபெற்றுவருகிறார் இந்த நிலையில் சங்கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுகுறித்து சங்கீதாவின் தந்தை பெரியசாமி செந்துறை காவல் நிலையத்தில் `என் மகள் தற்கொலை செய்துகொள்ள சரவணன்தான் காரணம் எனக் கடந்த 23-ம் தேதி புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் போலீஸார் எடுக்கவில்லை பணத்தை வாங்கிக்கொண்டு போலீஸார் மூடிமறைக்கப்பார்க்கிறார்கள் என் மகளின் இறப்புக்கு நியாயம் கிடைக்கும் வரை விடப்போதில்லை3939 என்று ஆதங்கத்தோடு பேசினார்

Leave A Reply

Your email address will not be published.