`எனக்கு நேரம் சரியில்ல; அப்படி பேசிவிட்டேன்!’- போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ரகளை செய்த டிரைவருக்கு நடந்த சோகம்

0 16

நடுரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வீரவசனம் பேசிய ரவீந்திரன் `எனக்கு நேரம் சரியில்லை அதனால்தான் அப்படி பேசிவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள்39 என்று கெஞ்சியதாக தகவல் வெளியாகியுள்ளது சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டியில் ஒருவர் மனைவியுடன் வந்தார் அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸார் ஸ்கூட்டியை நிறுத்தினர் இதனால் ஸ்கூட்டியில் வந்தவர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது `நீ யாருய்யா பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கிற39 என்று ஒருமையில் பேசிய வீடியோ வெளியானது ஒருகட்டத்தில் ஸ்கூட்டியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு அந்த நபர் மனைவியுடன் சென்றுவிட்டார் ஸ்கூட்டியைக் கைப்பற்றிய போலீஸார் அமைந்தகரை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர் தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின்பேரில் அமைந்தகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் வழக்கு பதிவு செய்து ஸ்கூட்டியில் வந்தவர் யார் என்று விசாரித்தார் விசாரணையில் அவரின் பெயர் ரவீந்திரன் அரும்பாக்கம் சக்திநகரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது மேலும் அவர் டிரைவராக பணியாற்றுவது தெரியவந்தது இதையடுத்து ரவீந்திரனை போலீஸார் கைது செய்து அவர் மீது ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டியது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது கொலை மிரட்டல் விடுத்தது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் இதுகுறித்து அமைந்தகரை போலீஸார் கூறுகையில் “டிரைவர் ரவீந்திரனுக்கும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் நடுரோட்டில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டியில் வந்தது தொடர்பாக  வாக்குவாதம் நடந்துள்ளது அதுதொடர்பான  வீடியோ வெளியானதும் காவல்துறை உயரதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர் இதனால் ரவீந்திரன் ஓட்டி வந்த ஸ்கூட்டியின் ஆவணங்கள் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினோம் அப்போது அந்த ஸ்கூட்டர் வேறு ஒருவரின் பெயரில் இருந்தது அந்த முகவரிக்குச் சென்று விசாரித்தபோதுதான் ரவீந்திரன் குறித்த தகவல் தெரியவந்தது அரும்பாக்கத்தில் குடியிருக்கும் ரவீந்திரனின் வீட்டுக்குச் சென்றபோது அவர் சர்வசாதாரணமாக இருந்தார் அவரிடம் விவரத்தைக்கூறி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தோம் அவரிடம் ஏன் அப்படி நடந்துகொண்டீர்கள் என்று கேட்டதற்கு `எனக்கு ஆயிரத்தெட்டு பிரச்னைகள் உள்ளன அதில் பிரச்னை தொடர்பாக அவசரமாக ஸ்கூட்டியில் நானும் என் மனைவியும் சென்றுகொண்டிருந்தோம் அவசரத்தில் ஹெல்மெட் அணிய மறந்துவிட்டேன் போலீஸார் என்னைப்பிடித்ததும் அவசரமாக செல்வதால் விட்டுவிடும்படி முதலில் கூறினேன் ஆனால் அங்கிருந்த போலீஸாரின் பேச்சு எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது இதனால்தான் நான் அப்படி பேசிவிட்டேன் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் மொத்தத்தில் எனக்கு நேரம் சரியில்லை39 என்று வாக்குமூலம் அளித்துள்ளார் போலீஸார் பிடித்ததும் அவர் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டியதற்காக அபராதம் மட்டும் ரவீந்திரனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஆனால் நடுரோட்டில் அவர் நடந்துகொண்ட செயலால் இன்று சிறைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்றனர் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் “ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்பவர்களைப் பிடிக்கும்போது போலீஸார் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியதுள்ளது ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் பயன்கள் குறித்து வாகன ஓட்டுபவர்களுக்கு தெரிவதில்லை மாறாக போலீஸாரை எதிரிபோல பார்க்கின்றனர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் எங்களால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை மட்டுமே எடுக்க முடியும் மேலும் விபத்தில் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்கத்தான் ஹெல்மெட் அணிவதை நீதிமன்றமும் கட்டாயப்படுத்தியுள்ளது நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர் சென்னையைப் பொறுத்தவரை ஒருசிலர்தான் இன்னமும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்கின்றனர் அமைந்தகரையில் நடந்த சம்பவத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த ரவீந்திரன் மீது உடனடியாக போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்கலாம் ஆனால் அதை போலீஸார் செய்யவில்லை மேலும் ரவீந்திரன் சம்பவ இடத்திலிருந்து எப்படி தப்பிச் சென்றார் என்று சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் விளக்கம் கேட்டுள்ளோம் இன்ஸ்பெக்டருக்கும் ரவீந்திரனுக்கும் இடையே நடந்த தகராறு தொடர்பான வீடியோ வெளியானது குறித்தும் விசாரணை நடந்துவருகிறது என்றார்ரவீந்திரனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸார் தங்கள் பாணியில் அவரைக் கவனித்துள்ளனர் அப்போது ரவீந்திரன் தரப்பினர் அவர் செய்தது தப்புதான் மன்னித்து விட்டுவிடுங்கள் வேண்டுமென்றால் சம்பந்தப்பட்டவரிடமே மன்னிப்புக் கேட்கிறோம் என்று கூறியுள்ளனர் ஆனால் வீடியோ வெளியானதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றுகூறிய போலீஸார் ரவீந்திரனை சிறையில் அடைத்துள்ளனர் `நீ யாருய்யா39 என்று நடுரோட்டில் வீரவசனம் பேசிய ரவீந்திரன் காவல் நிலையத்தில் போலீஸாரின் கவனிப்புக்குப்பிறகு பெட்டிப் பாம்பாக அமைதியாகிவிட்டதாக உள்விவரம் தெரிந்த காவலர்கள் தெரிவித்தனர் 

Leave A Reply

Your email address will not be published.