காணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி… சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு

0 21

பாளையங்கோட்டை கிருபாநகர்ப் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே 30 முட்டைகளுடன் அடைகாத்து வந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது அதை வனத்துறையினர் எடுத்துச் சென்று முட்டைகளைப் பாதுகாத்து வருகின்றனர் நெல்லை மாவட்டத்தில் கடந்த 92-ம் ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் மழையின்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அப்போது ஏராளமான மலைப்பாம்புகள் ஆற்றின் வழியாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்தன வயல்வெளிகள் முட்புதர்களில் தஞ்சமடைந்த பாம்புகள் அடிக்கடி பிடிபட்டு வருகின்றன இதுவரை தாமிரபரணி ஆற்றங்கரைப் பகுதி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில்  ஆயிரக்கணக்கான மலைப்பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதிகளில் கொண்டுவிடப்பட்டுள்ளன இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டை கிருபாநகர்ப் பகுதியில் தினேஷ் என்பவருக்குச் சொந்தமான மீன் பண்ணை அருகே இன்று மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது அந்த மீன் பண்ணையிலிருந்து ஏராளமான மீன்கள் காணாமல் போனதால் உரிமையாளர் சந்தேகமடைந்துள்ளார் அதனால் சுற்றுப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் இருந்துள்ளார் அப்போது மீன் கழிவுகளை உண்பதற்காக வந்த மலைப்பாம்பு ஒன்று வந்ததைக் கண்டுபிடித்துள்ளார் மீன்களை உட்கொண்ட மலைப்பாம்பு அங்கிருந்து சென்று அருகில் உள்ள முட்புதரில் பதுங்கியதையும் அவர் பார்த்துள்ளார் அதனால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார் அந்தப் பகுதிக்குச் சென்ற தீயணைப்புத் துறை அதிகாரி வீரராஜ் தலைமையிலான குழுவினர் அங்குள்ள ஒரு குழிக்குள் 30 முட்டைகளுடன் பாம்பு பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்தனர் அந்த முட்டைகளின் மீது சுருண்டு அடைகாத்த மலைப்பாம்பு அங்கு சென்றவர்களைப் பார்த்ததும் சினத்துடன் சீறியுள்ளது சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் புதரில் பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பையும் அதனுடன் இருந்த முட்டைகளையும் பத்திரமாக மீட்டனர் பின்னர் பொன்னாகுடியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அவை ஒப்படைக்கப்பட்டன அதன் பின்னர் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பாம்புக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது மலைப்பாம்பையும் முட்டைகளையும் 30 நாள்கள் பாதுகாப்பாக வைத்திருந்து குஞ்சு பொறித்த பின்னர் வனப்பகுதியில் கொண்டுவிட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்  

Leave A Reply

Your email address will not be published.