நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கலாம் – அனுமதி வழங்கியது மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம்

0 27

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை அமைக்கத்துக்கொள்ளலாம் என அனுமதி அளித்திருக்கிறது மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இந்தத் திட்டத்தால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது, எனவே இந்தத் திட்டத்தை தொடங்க அனுமதிக்கலாம் எனப் பரிந்துரைத்திருந்தது. அதைத் தொடர்ந்தே இந்த அனுமதியை சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அதே வேளையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறையின் அனுமதியைப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தினமும் 340 கி.லி தண்ணீரைப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ ஆய்வு மையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதை சிறப்புத் திட்டமாகச் செயல்படுத்தப்போவதால் இனி புதிதாகச் சுற்றுச்சூழல் அறிக்கைகள் தேவையில்லை, பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தத் தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.