`அது ஒரு மோசடிக் குடும்பம்..!’ – விவேக் ஜெயராமனைச் சாடும் ஜெயக்குமார்

0 29

சட்டப் பல்கலைக்கழகத்தில் போலியான ஆவணங்களைக் காட்டி, விவேக் ஜெயராமன் என்.ஆர்.ஐ கோட்டா ஒதுக்கீட்டில் எல்.எல்.பி படிப்பில் சேர்க்கை பெற்றிருப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 29-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதனால், அது வரை பொறுத்திருப்போம். சிந்தாமல் சிதறாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என நம்புகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழக அரசு ஓயாது.

சட்டப் பல்கலையில் விவேக் ஜெயராமன் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து, என்.ஆர்.ஐ கோட்டா மூலம் மூன்று ஆண்டுகள் கொண்ட எல்.எல்.பி படிப்பில் சேர்க்கை பெற்றிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் குடும்பமே ஒரு மோசடிக் குடும்பம். அரசாங்கத்தை ஏமாற்றுபவர்கள் கண்டிப்பாக சிறையில் அடைக்கப்படுவர்” என்று காட்டமாகக் கூறினார்.

இதன்பின்னர், செய்தியாளர்கள், நியூட்ரினோ திட்டத்திற்கு 2016-ல் குழு ஒன்றை அமைத்து, ஆய்வு செய்தபின்தான் அமைக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி இத்திட்டம் செயல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், மக்களுடைய விருப்பத்திற்கு மாறாக எந்தத் திட்டமும் செயல்படுத்தப்பட மாட்டாது. மக்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்காது என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.