நகராட்சியின் வரி அறிவிப்பால் ஸ்தம்பித்த மாவட்டம்

0 25

நகராட்சியில் பல மடங்கு வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து அரியலூரில் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். இந்தக் கடையடைப்புப் போராட்டத்தால் மாவட்டமே ஸ்தம்பித்தது.

அரியலூர் நகராட்சியில் ஆயிரக்கணக்கான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் அரியலூர் நகராட்சி சார்பில் நடப்பு ஆண்டிற்கான தொழில்வரி, தொழில் உரிமை கட்டணம் மற்றும் வீட்டு வரி ஆகியவை பல மடங்கு உயத்தப்பட்டு ரசீதுகள் வழங்கப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த வணிகர்கள் உயர்த்தப்பட்ட வரியைக் குறைக்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நகராட்சி ஆணையர் வினோத்திடம் வணிகர் சங்கத்தினர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர்த்தப்பட்ட வரிகளைக் குறைக்க வலியுறுத்தினர். கடந்த ஆண்டு கட்டிய வரிகளை கட்டிக் கொள்ள நகராட்சி ஆணையர் அனுமதி வழங்கினார். அதிகரிக்கப்பட்ட வரியைக் கட்டியவர்கள் அடுத்த ஆண்டிற்கான வரியில் கழித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் கூறியதையடுத்து வணிகர்கள் கடைகளை மதியத்திற்கு மேல் திறக்க முடிவு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.