“காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு எங்க ஆள்களை தாக்குகிறார்கள்” செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு!

0 28

“;கூட்டுறவுச் சங்க தேர்தலில் போட்டியிடுவதுக்காக ஜனநாயக முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய போன எங்க அமைப்பைச் சேர்ந்தவர்களை ஆளுங்கட்சி ரவுடிகள், காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது”; என்றார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.

தமிழ்நாடு முழுக்க கூட்டுறவுச் சங்க தேர்தலுக்கான அறிவிப்பை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. நான்கு கட்டமாக நடக்கும் கூட்டுறவுச் சங்க தேர்தலில் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கும், டி.டி.வி.தினகரன் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழ்நாடு முழுக்க ஆங்காங்கே பிரச்னை எழுந்தது.

இந்நிலையில், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் நடந்த வேட்புமனு தாக்கலின்போது இருதரப்புக்கும் கலவரம் வெடித்தது. டி.எஸ்.பி கும்மராஜா ஜீப் கண்ணாடியை கல் எறிந்து உடைத்தனர். பலருக்கும் ரத்தகாயம் ஏற்பட்டது. டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த எட்டு பேர் கலவரத்தில் ஈடுப்பட்டதாக கைதும் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த பிரச்னையை கண்டித்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, “;ஆளுங்கட்சியின் ரவுடிகள் காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு, ஜனநாயக முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அவர்களுக்கு தாக்குதலுக்கு உள்ளான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்களுக்கு முதலுதவி கூட செய்யாமல் கைது செய்து மண்டபத்தில் காவல்துறை அடைத்தது. அதோடு, காவல்துறை ஜீப்பை அவர்களே உடைத்துவிட்டு, பழியை எங்கள் ஆட்கள் மீது போட்டு, கைது செய்திருக்கிறது.

இன்னும் பல இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், ‘விண்ணப்பம் இல்லை’ என்று அளுங்கட்சியினரை தவிர்த்து மற்றவர்களிடம் சொல்லியுள்ளனர். மேலும், இதுபற்றி புகார்களை தெரிவிக்கலாம்ன்னு தொலைபேசி எண்ணை அறிவித்த கூட்டுறவுச் சங்க தலைமை தேர்தல் அதிகாரியே தொலைபேசியை எடுப்பதில்லை. அப்புறம் எப்படி இந்த தேர்தல் நேர்மையாக நடைபெறும். டி.டி.வி.தினகரன் அறிவுறுத்தலோடு இந்த பிரச்னையை கோர்ட்டுக்கு கொண்டு போக இருக்கிறோம்”; என்றார்.

Leave A Reply

Your email address will not be published.