‘தீ விபத்தால் என்னென்ன சேதங்கள்?’ – மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஐ.ஐ.டி குழு ஆய்வு

0 23

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பெங்களூரைச் சேர்ந்த ஐ.ஐ.டி குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவில், 10-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், கடந்த பிப்ரவரி 2-ம் தேதி இரவு சுமார் 10:30 மணிக்கு, கிழக்குக் கோபுர வாயிலில் இருந்த கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம், சண்டிகேசுவரர் ஆலய மேற்கூரை உள்ளிட்ட 7 ஆயிரம் சதுர பரப்பளவுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. அப்பகுதியிலிருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓவியங்களும், கலையழகு மிக்க தூண்களும் சிதிலமடைந்தன. இவற்றை மறுபடியும் மீட்டெடுக்க, தமிழக அரசால் அமைக்கப்பட்ட சீரமைப்புக்குழு தற்போது, பல்வேறுகட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

அந்த ஆய்வின் தொடர்ச்சியாக, இன்று பெங்களூரு ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் குழு, மீனாட்சி அம்மன் கோயிலில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. அல்ட்ரா சானிக் தொழில்நுட்பம் மூலமாக மிகப் பழமையான தூண்களையும், சிலைகளையும் ஆய்வுசெய்துள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆய்வு, இன்று முழுவதும் நடைபெறுகிறது. இந்த ஆய்வில், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தனிக் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. கண்ணாடிகள், ஒலி அலைகள் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களைக் கொண்டும் கட்டடங்களை இக்குழு ஆராய்ச்சிசெய்துவருகிறது .

Leave A Reply

Your email address will not be published.