`போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டால்..!’ தி.மு.க-வை எச்சரிக்கும் அமைச்சர்

0 17

காவிரி மேலாண்மை வாரிய பிரச்னைக்காக வரும் 5-ம் தேதி தி.மு.க நடத்தும் முழு அடைப்பின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. நாகர்கோவிலில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொள்கிறார். இதற்காக இன்று கன்னியாகுமரி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”;காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சம் பொதுமக்கள் கலந்துகொள்ளும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் பிரச்னைக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போன்றவற்றையும் தமிழக அரசு மேற்கொள்கிறது. காவிரி பிரச்னையில் சிக்கல் ஏற்பட காரணமே தி.மு.கதான். தற்போது இந்தப் பிரச்னையில் தி.மு.க. தனியாக செயல்படுவதுடன், வேலைநிறுத்தப் போராட்டமும் அறிவித்துள்ளது. வரும் 5-ம் தேதி தி.மு.க. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செயல்பட வேண்டும். தி.மு.கவின் முழு அடைப்புப் போராட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும். தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நியாயமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அதிகாரியை அவதூறாகப் பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தவறுகள் நடந்திருந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்”; என்றார்.

Leave A Reply

Your email address will not be published.