மத்திய அரசின் புதிய தொழிலாளர் நலச் சட்டத்துக்கு எதிர்ப்பு! – கேரளத்தில் 24 மணி நேர பந்த்

0 18

மத்திய அரசின் புதிய தொழிலாளர் நலச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளத்தில் 24 மணி நேர பந்த் நடந்துவருகிறது.

தொழிலாளர் நலச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து, புதிய வடிவிலான தொழிலாளர் நலச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத் திருத்தம், தொழிலாளர்களுக்கு எதிராக அமைந்திருப்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், கேரளாவில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில், இன்று 24 மணி நேர வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணிக்குத் துவங்கிய இந்தப் போராட்டம், இன்று நள்ளிரவு 12 மணிவரை நடக்கிறது.

முழு வேலை நிறுத்தம் காரணமாக, கேரள அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரளப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள், மாவட்ட எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன. கேரளத்தில், வழக்கமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடத்தப்படும். ஆனால், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சுமார் 14-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து, 24 மணிநேரம் பந்த நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.