டி.எஸ்.பிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள், புரட்சி பாரதம் கட்சியனர் ஆர்ப்பாட்டம்..!

0 17

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு முன், விடுதலைச் சிறுத்தைகள், புரட்சி பாரதம், பகுஜன் சமாஜ் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் சிறிது நேரம் மூடப்பட்டது.

திருவள்ளூர் அடுத்த வெள்ளவேடு பகுதியில் போலீஸ் டி.எஸ்.பி புகழேந்திக்கும் புரட்சி பாரத கட்சியின் தலைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து விடுதலை சிறுத்தைகள் மற்றும் புரட்சி பாரதம், பகுஜன் சமாஜ் ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு முன் ஒன்று கூடி டி.எஸ்.பிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

அதன் பின்னர் திருவள்ளூர் திருப்பதி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பிறகு ஆட்சியர் சுந்தரவள்ளியைச் சந்தித்து மனு கொடுத்தனர். மனு கொடுக்க கட்சித் தொண்டர்கள் அனைவரும் உள்ளே சென்றதால் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அதே போல திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சிபிசக்ரவர்த்தியிடமும் புகார் மனு அளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.