சுகவனேஸ்வரர் கோயில் யானையைக் கருணைக் கொலை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி..!

0 17

சேலத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணைக் கொலை செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் பெண் யானை ராஜேஸ்வரி (42 வயது), பக்கவாத நோயினால் கால்கள் பாதிக்கப்பட்டு, எழுந்து நிற்க முடியாமலும் திரும்பிப் படுக்க முடியாமலும், படுத்த படுக்கையாக உணவு எதுவும் உண்ணாமல், மிகவும் கவலைக்கிடமானநிலையில் உள்ளது. இந்த நிலையில், யானையை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘யானையின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து, 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பரிசோதனை பலன் தராதநிலையில், யானையைக் கருணைக் கொலை செய்யலாம்’ என்று உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.