`கர்நாடகக்க் காவியின் தூதுவர் ரஜினி!’ – கொந்தளித்த பாரதிராஜா

0 18

காவிரி தொடர்பான எழுச்சி தமிழகத்தில் வலுத்து வரும்போது ஐ.பி.எல் போட்டிகளைச் சென்னையில் நடத்துவது மக்களைத் திசை திருப்பிவிடும் என்ற நோக்கில் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம், தங்கர் பச்சான், கெளதமன் எனத் திரையுலகைச் சார்ந்த பலரும் சேர்ந்து ‘தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை’ சார்பில் சென்னை அண்ணாசாலையில் சென்ற வாரம் போராட்டம் நடத்தினர். பல அமைப்பினரும் இந்தப் போராட்டத்தில் இருந்தனர். போராட்டக் குழுவில் ஒருவர் போலீஸாரைத் தாக்குவதுபோல் இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினி, “;சீருடை அணிந்திருக்கும் காவலரைத் தாக்குவது உச்சகட்ட வன்முறை. இப்படித் தாக்குபவர்களைத் தண்டிக்க கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்”; என ட்வீட் வெளிட்டிருந்தார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்த்தின் ட்வீட்:

வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள்மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும். pic.twitter.com/05buIcQ1VS

— Rajinikanth (@rajinikanth) April 11, 2018

இந்தநிலையில், ரஜினிக்கு, இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “;எது வன்முறையின் உச்சகட்டம். இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்தபோது குரல் கொடுத்தீர்களா, நியூட்ரினோவுக்கு எதிராகப் போராடினீர்களா. மீத்தேன் பற்றி பேசினீர்களா. காவிரிக்காக ஒன்றுகூடியத் தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறை என்கிறீர்கள்’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “;ரஜினி ஒரு கர்நாடகக் காவியின் தூதுவர், தமிழனின் ரத்தத்தில் ராஜ வாழ்க்கை வாழும் நீங்கள் எங்களுக்கு வன்முறையாளர்கள் பட்டம் கட்டுவதா. “;என்னப் பேசுகிறோம் என்று உணர்ந்து பேசுங்கள், இல்லையேல் தமிழர்களால் ஒதுக்கப்படுவீர்கள். இந்த நிகழ்வைக் கறைப்படுத்த நினைத்த ஒருவன், செய்த செயல்பாட்டுக்கு நாங்கள் வருந்துகிறோம். நடந்த போராட்டம் தனி மனிதருக்கானது அல்ல. உங்களுடைய உணவுக்கும் குடி நீருக்கும் சேர்த்துதான்”; என்றும் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

பாரதிராஜாவின் இத்தனைக் காட்டமான ஒரு அறிக்கை பலத்தரப்பட்ட மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.